Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா இன்சூரன்ஸ்.. ரூ.436 கட்டினால் 2 லட்சம் சூப்பர் திட்டம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையில் எப்போது நெருக்கடியும், அவசரமும் நம்மை சூழும் என்பது தெரியாது.. ஆனால், எதிர்பாராத நெருக்கடிகள் வரும்போது, அவைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும். இப்படியான நேரத்தில்தான் நமக்கு கைகொடுத்து உதவுவது காப்பீட்டு திட்டங்களாகும். எனவேதான், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டமாகும். இதன் பலன்கள் என்னென்ன ? இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா?

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்னும் காப்பீட்டு திட்டம், டேர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும். பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பவர்களுக்காக, மருத்துவ காப்பீட்டை தரக்கூடிய அருமையான திட்டம்தான் இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY).. இந்த திட்டத்தின் பிரீமியம் மிகவும் குறைவாகும்.

Pradhan mantri jeevan jyoti bima yojana PMJJBY

மருத்துவ காப்பீடு

வருடத்துக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. ஒருவேளை காப்பீடு எடுத்திருப்பவர் மரணம் அடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், வருடத்துக்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.. அதாவது மாத மாதம், ரூ. 36 என்ற அளவில் ப்ரீமியம் செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.. இந்த திட்டத்தில் காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.

இன்சூரன்ஸ் கவரேஜ்

அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது அதாவது ஆண்டின் எந்த மாதத்திலும் வாங்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும்.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைய வேண்டுமானால், 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.. இது 1 வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், பாலிசியை ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ள வேண்டும்..

பாலிசி எடுப்பதற்கு எந்தவிதமான மெடிக்கல் செக்கப்புகள் தேவையில்லை. காப்பீட்டு பாலிசியின் ஒப்புதல் கடிதத்தில் சில குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.. அந்த நோய்களால் நீங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை மட்டும் எழுதி தந்தால் போதும். தவறான தகவல் அளித்தால், இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.

அஞ்சல் அலுவலகங்கள்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தை எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட கணக்கை வைத்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதில், இணையலாம். ஒருவேளை உங்களின் வங்கி கணக்கு மூடப்பட்டாலோ அல்லது ப்ரீமியம் வசூலிக்கும்போது போதுமான பணம் வங்கி கணக்கில் இல்லாமல் இருந்தாலோ, இந்த காப்பீடு காலாவதியாகிவிடும்.

உங்களுக்கு பல வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும், எல்லா வங்கிகளிலுமே, இந்த திட்டத்தினை ஆரம்பிக்க முடியாது. ஒருவருக்கு ஒரு பாலிசி தான் எடுக்க முடியும். இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

இறப்பு சான்றிதழ் - ஆவணங்கள்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பித்து, பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு போன்றவற்றையும் ஆவணமாக வழங்க வேண்டும். இந்த ஆவணங்களை சரிபார்த்து, இன்சூரன்ஸ் நிறுவனம் 30 நாட்களுக்குள் காப்பீட்டு பணத்தை வங்கி கணக்கில் சேர்த்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+