ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு.. ‘ராமாயணம்’ கருத்தால் சிக்கல்!
அமராவதி: ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர மாநில பாஜக தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரகாஷ் ராஜிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் நடந்த கலந்துரையாடலின் போது ராமாயணம் சார்ந்த ஒரு நிகழ்வை விவரித்தார். அதில் ராமாயணக் கதாபாத்திரங்கள் நவீன கால உரையாடல்களை மேற்கொள்வது போன்ற ஒரு கற்பனையான கதையை அவர் கூறினார்.

குறிப்பாக, சீதையைத் தேடிச் செல்லும் பயணத்தின் போது தான் சாப்பிட்ட பழங்களுக்கு ராமன் பணம் செலுத்துவதாக அந்த உரையாடல் அமைந்திருந்தது. இது ஒரு கற்பனைக் கதையாகக் கூறப்பட்டாலும், இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய பேசியிருந்தார். "ராமரும், லட்சுமணரும் வடநாட்டில் இருந்து தென்னாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள்" என்கிற பொருள்பட அவர் பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
திருப்பதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராகவும் உள்ள பானு பிரகாஷ், பிரகாஷ்ராஜின் பேச்சு இந்து சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் திட்டமிட்டே மதக் கருத்துக்களைத் திரித்துக் கூறி சர்ச்சையை கிளப்ப முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதே விவகாரத்தில் வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவரும் ஏற்கெனவே பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, நடிகர் பிரகாஷ் ராஜ் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது ராமர், லட்சுமணர் குறித்து அவதூறாக பேசிய பிரகாஷ் ராஜிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரகாஷ் ராஜ் வீட்டுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications