சீறும் தெலுங்கர்கள்! அமித் ஷாவிற்கு செருப்பு எடுத்து தந்த பாஜக தலைவர்! பிரகாஷ் ராஜுக்கு வந்ததே கோபம்
சென்னை: தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் எம்பி அமைச்சர் அமித் ஷாவிற்கு செருப்பு எடுத்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள முனுகுடுவில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஹைதராபாத் சென்று இருந்தார். செகந்திராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் அமித் ஷா வழிபாடு நடத்தினார்.
அதன்பின் வெளியே வந்த அமித் ஷா மெதுவாக நடந்து கொண்டு இருந்தார். அவர் வெளியே செருப்பை விட்டு இருந்த நிலையில் தெலுங்கானா பாஜக தலைவர் எம்பி பந்தி சஞ்சய் வேகமாக ஓடிப்போய் அந்த செருப்பை கையால் எடுத்தார்.

அமித் ஷா
அமித் ஷா மெதுவாக நடந்து வர பந்தி சஞ்சய் வேகமாக ஓடி செருப்பை எடுத்து கொடுத்தார். எதோ அடிமை போல அவர் நடந்து கொண்டனர். வேகமாக ஓடிப்போய் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு பந்தி சஞ்சய் அமித் ஷா காலுக்கு அருகே வைத்தார். இவரின் செயல் வீடியோவாக வெளியாகி உள்ளது. தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் முழுக்க பரவி வருகிறது. அம்மாநில மக்கள் இடையே இந்த வீடியோ கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசிங்கம்
இதை விமர்சனம் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், அந்த நபரை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது. சீ.. சீ.. இப்படித்தான் நீங்கள் தெலுங்கு மக்களின் சுயமரியாதையை காப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் ஒருவரே இப்படி செருப்பை எடுத்துக்கொடுத்ததுதான் சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது. அவர் இப்படி செய்திருக்க கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கானா பிரைட்
#TelanganaPride என்ற டேக்கையும் இதற்காக தெலுங்கானா மக்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். தெலுங்கர்கள் என்ன அடிமைகளா? சுயமரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தனி மாநிலம் கேட்டோம். அப்படி இருக்கும் போது இப்படி செய்வது என்ன நியாயம். அமைச்சர் என்றால் செருப்பு கூட மாட்டிவிட வேண்டுமா என்று #TelanganaPride டேக்கின் கீழ் தெலுங்கர்கள் பலர் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

வடஇந்தியா
இன்னும் சில வடஇந்தியாவில் கூட இப்படி நடந்தது இல்லை. பீகாரில் இப்படி நடந்தது இல்லை. அப்படி இருக்கும் போது குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் இப்படி செருப்பு அணிவிப்பது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். முக்கியமான ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இப்படி போஸ்ட் செய்து வருகின்றனர். தெலுங்கு மக்களை அமித் ஷா அவமதித்துவிட்டார் என்று அவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications