ரூ.100 கோடி நிதி தந்த 1 மாதத்தில்.. பாஜக அரசின் ஒப்பந்தம்! தேர்தல் பத்திரம்.. பிரஷாந்த் பூஷன் கேள்வி
சென்னை; மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது பற்றி மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹980 கோடிகளை வழங்கிய உள்ளது. இது இந்தியாவில் அதிக தொகையை நிதியாக வழங்கிய இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும். அதே நிறுவனம் மங்கோலியாவில் ₹5400 கோடி பசுமை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை இந்தியா சார்பாக பெற்றது..

மேலும், அதே நிறுவனம் ₹3681 கோடி மதிப்புள்ள மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத்தைதிற்கான ஒப்பந்தத்தையும் பெற்றது. 38,000 கோடி மதிப்பிலான காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சமீபத்தில் சிஏஜி சுட்டிக் காட்டியது. இந்த நிறுவனம்தான் இந்த திட்டத்தின் முக்கிய ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனம் நிதியாக யாருக்கு இவ்வளவு கோடிகளை அள்ளிக்கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்தேகம் வருகிறது: இந்த நிலையில் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது பற்றி மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார். 11 ஏப்ரல் 23 அன்று, #ElectoralBonds-ல் 100 கோடிகளை மேகா இன்ஜினியரிங் யாருக்கோ வழங்கி உள்ளது? ஆனால் இருந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்கிய 1 மாதத்திற்குள் பாஜக ஆளும் மகாராஷ்டிரா அரசிடம் இருந்து ரூ. 14,400 கோடி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். SBI பத்திர எண்களை தகவலில் இருந்து மறைத்திருந்தாலும், சில நன்கொடையாளர்கள் மற்றும் கட்சிகளின் "மேட்சிங்கை" யூகிக்க முடியும். பெரும்பாலான நன்கொடைகள் மீதான சந்தேகம் எழுகிறது.
தேர்தல் பத்திர தடை: நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.
எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.

தேர்தல் பாத்திரங்கள் செயல்படும் முறை: கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.
இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.
சலுகை; தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி தேர்தல் பாத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications