2024 லோக்சபா தேர்தலில் "இவங்கதான்" வெற்றிபெற போறாங்க.. அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இனி 6ம் மற்றும் 7ம் கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. மே 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது.

இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்டிடிவியில் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதில், ஜூன் 4 முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்யும். இந்த தேர்தல் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் தங்கள் சொந்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
என்னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம்.
அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம்.
இதுதான் முடிவாக இருக்க போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை.
மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக்கருத்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடிஜி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.
மோடி மீது சிலருக்கு ஏமாற்றம் இருக்கலாம், நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம், ஆனால் பரவலான கோபம் எங்கேயும் இல்லை. மோடிக்கு எதிராக வலுவான தலைவர் நிறுத்தப்படவில்லை.
இவர் வந்தால் எங்கள் நிலைமை சீராகும் என்று மக்கள் நினைக்கும் ஒருவர் வரவில்லை. ராகுல் காந்தி வந்தால் நன்றாக இருக்கும் என்று யாரும் சொல்லி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவருடைய ஆதரவாளர்கள் அப்படிச் சொல்லலாம், ஆனால் நான் இன்னும் பரவலாகப் பேசுகிறேன். மக்கள் பலரும் அப்படி பேசவில்லை. பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபம் இல்லாதது பாஜகவிற்கு சாதகமாக மாறி உள்ளது. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 370 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. அவர்கள் 370 இடங்களில் தனியாக வெல்ல வாய்ப்பே இல்லை.
அதற்கான சான்ஸ் பூஜ்ஜியம் ஆனாலும் அவர்கள் இந்த நம்பரை திரும்ப திரும்ப சொல்ல காரணம் இருக்கிறது. அது ஒரு இது உளவியல் விஷயம். இது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியாகும். பாஜகவால் அந்த இலக்கை எடுக்க முடியாது. ஆனாலும் உளவியல் ரீதியாக எதிர்கட்சிகளை அடிக்க இப்படி செய்கின்றனர்,
கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக 10-20 சீட் வாங்கினால் ஆச்சர்யம். ஆனால் மொத்தமாக 60-70 சீட் கூடுதலாக வாங்குவதற்கு சான்ஸே இல்லை.
370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. ஆனால் பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும்., என்று அவர் கூறியுள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications