காப்பி அடிப்பதே அவர்தான்.. மநீம வைத்த டெஸ்டில் "பெயிலான" பிகே.. ரகசியத்தை உடைத்த கமல்ஹாசன்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் வைத்த டெஸ்டில் பிரஷாந்த் கிஷோர் பாஸ் ஆகவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுகவிற்கான தேர்தல் பணிகளை பிரஷாந்த் கிஷோரின் குழுதான் கவனித்து வருகிறது.
பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம் என்று பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் முக்கிய காரணமாக இருந்தார். இவரை திமுகவும் இந்த தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

எப்படி
முன்னதாக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக செய்திகள் வந்தன. மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் பணிகளை வகுக்க பிகேவை கமல்ஹாசன் அணுகினார். ஆனால் இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால் திமுக இவருடன் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியாகின.

விளக்கம்
இந்த நிலையில் ஐபேக் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் பேசினார். இதில், மக்கள் நீதி மய்யத்திற்கு இந்த சட்டசபை தேர்தலில் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது.

திமுக
திமுகவின் ஆலோசகராக தற்போது பிகே இருக்கிறார். பிரஷாந்த் கிஷோரை ஆலோசகராக நியமிக்க முதலில் மக்கள் நீதி மய்யம் விரும்பியது. இதற்காக அவரை நேரில் அணுகினோம். அவரிடம் நிறைய கேள்விகளை வைத்தோம்.

சோதனை
அவரை சோதனை செய்தோம். ஆனால் நாங்கள் வைத்த சோதனையில் பிரசாந்த் கிஷோர் பாஸ் ஆகவில்லை. எங்கள் டெஸ்டில் அவர் பெயிலாகிவிட்டார். அதனால் அவருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. இப்போது அவரிடம் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

திட்டங்கள்
திமுக சுயமாக திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. திமுக எங்களின் திட்டத்தைதான் காப்பி அடிக்கிறது. நான் கொடுத்த வாக்குறுதிகளை பெயர் மாற்றி திமுக அறிவிக்கிறது. பிகேதான் எங்களின் திட்டங்களை காப்பி அடிப்பது, என்று கமல்ஹாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications