"பிரபலத்தையே' வட்டமிடும் தமிழக அரசியல் கட்சிகள்? திமுக ஓட்டை பிரிக்க முடிவு? ஆஹா, இப்பவே புகையுதே?
சென்னை: வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே தமிழக அரசியலில் தொற்றிக் கொண்டுள்ளது.. இதுகுறித்த பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் இணையத்தை வட்டமடிக்க துவங்கிவிட்டன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய பலமே அதன் பலமான கூட்டணிதான்.. அதேசமயம் அதிமுக சறுக்கலை சந்திக்க முக்கய காரணமே அதன் பலவீனமான கூட்டணிதான் என்று கூறப்பட்டது.
அதனால்தான், தற்போது ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதுமுள்ள நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிச்சயம் வரும் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என்று நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம்.

மெகா கூட்டணி: இதனிடையே, வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு அவ்வளவு எளிதாக அமைந்து விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தரப்புக்கு, கடந்த மாதமே சில ரிப்போர்ட்கள் சென்றதாம்..
அதாவது, நடிகர் விஜய்யை இணைத்து, அதிமுக கூட்டணி அமைத்துவிட்டதால் திமுகவின் ஓட்டுக்கள் சிதற வாய்ப்புண்டு. சமூக நீதி மற்றும் மதசார்பற்ற அரசியலையே தன்னுடைய நோக்கமாக கொண்டுள்ளதாக விஜய்யின் முதல் அறிக்கையும் வெளியாயிருந்த நிலையில், திமுக - காங்கிரஸ் அணியின் வாக்குகள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்பவர்களும் விஜய் பக்கம் செல்லக்கூடும்.. இது திமுகவுக்கு பெரிய நெருக்கடியாக அமையும்" என்றெல்லாம் திமுக மேலிடத்துக்கு சில சோர்ஸ்கள் கிடைத்தனவாம்.
கூட்டணி ஐடியா: அதுமட்டுமல்ல, வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள், எடப்பாடியிடம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின்போதே இப்படியொரு கூட்டணி ஐடியா அதிமுகவிடம் இருந்த நிலையில், சீமான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. வழக்கம்போல் தனித்து போட்டி என்றே அறிவித்துவிட்டார்..
சீமான்: ஆனால் தென் மாவட்டங்களில், ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பிரித்துவரும் ஓட்டுக்கள் பெரும்பாலும் திமுக ஓட்டுக்கள் என்பதால், இந்த முறையாவது நாம் தமிழர் கட்சியை நழுவவிடக்கூடாது என்று எடப்பாடியிடம் சொல்லி வருகிறார்களாம். எனவே, நாம் தமிழர் - விஜய் - அதிமுக என இப்படியொரு கூட்டணி அமைந்தாலும், திமுகவுக்கு சிக்கலை தந்துவிடும் என்றெல்லாம் திமுக மேலிடத்துக்கு ரிப்போர்ட்கள் சென்றதாக சலசலக்கப்பட்டது.
அந்தவகையில், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் ரொம்பவே சவாலாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.. அதிமுகவால் திமுக கூட்டணிக்கு எந்தவிதமான நெருக்கடி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், கடந்த முறை போல இந்த முறையும் கூட்டணி கட்சிகளை இழுக்க அதிமுக முயற்சிக்கலாம் என்பதற்காகவும், திமுக மேலிடம் இப்போதே அலர்ட் ஆகியிருக்கிறதாம்.
பிகே வியூகம்: இதற்காகவே, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் உதவியை திமுக நாடியதாகவும், இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தரப்பை, பிரசாந்த் கிஷோர் சந்தித்துவிட்டு சென்றதாகவும், ஆனால், இந்த முதல்கட்ட சந்திப்பில் எதுவுமே உறுதிப்படுத்தவில்லை என்றும் தகவல்கள் கசிந்திருந்தன.
அதேபோல, "தன்னுடைய அரசியல் பயணத்திற்கு ஆலோசனை வழங்க பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக இன்னொரு தகவலும் வெளியானது.
விஜய் உதவி: ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த பிரசாந்த் கிஷோர், "அரசியல் ஆலோசனைக்காக நடிகர் விஜய் என்னை இதுவரை அணுகவில்லை.. ஆனால் விஜய் உதவி கேட்டால் கட்டாயம் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன்.. ஆனால் நடிகர் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக இருக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இப்படி, திமுக, விஜய் என இரு தரப்பிலுமே பிரசாந்த கிஷோரின் உதவியை நாடக்கூடும் என்று பரபரத்து வரும்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, பிரசாந்த் கிஷோரை, அதிமுக அணுக உள்ளதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது..
தொடர் ஆலோசனைகள்: அடுத்தடுத்த தேர்தல் தோல்வியால் நொந்து போயிருக்கும் அதிமுக, இனி ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்து வருகிறது.. மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக தலைமை தொடர் ஆலோசனைகளையும் நடத்தி வருகிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக ஆலோசனைகளை வழங்கி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அதே ஆந்திரா ஃபார்முலாவை தமிழகத்திலும் பரிசோதிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம்..
முடிவு என்ன?: ஆனால், "இனிமேல் எந்த கட்சிக்கும் தேர்தல் பணிகளை செய்யப்போவதில்லை, சொந்த மாநிலமான பீகாரில் அரசியல் பணியில் ஈடுபட போகிறேன்" என்று பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் திமுகவுக்கு வியூகம் வகுக்க போகிறாரா? அல்லது அதிமுகவுக்கு வியூகம் வகுக்க போகிறாரா? அல்லது விஜய்க்கு ஆலோசனை வழங்க போகிறாரா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், வரப்போகும் தேர்தலில் பி.கே.வின் அரசியல் பங்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...!
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம்












Click it and Unblock the Notifications