டெல்லி நல்லபடியா முடிஞ்சாச்சு.. அடுத்து கொல்கத்தாவும், சென்னையும் பாக்கி இருக்கு.. பிகே செம பிஸி!
Recommended Video
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற செய்ய வைத்தாகி அடுத்தது கொல்கத்தா மற்றும் சென்னைதான் பாக்கி. அடுத்த ஆண்டில் பிரசாந்த் கிஷோர் செம பிஸியாக இருப்பார்.
பிரசாந்த் கிஷோர் ஐபேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு ஆலோசனைகளையும் தேர்தல் வியூகங்களையும் வகுக்கப்பட்டு வருகிறது.
இவர் வகுத்து கொடுத்த வியூகங்களை கொண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி வெற்றி பெற்றார். அது போல் கடந்த 2014-ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜகவுக்கு வியூகம் வகுத்து தந்தார்.

பிரசாந்த் கிஷோர்
இதையடுத்து மத்தியில் பாஜக வெற்றி பெற்றது. அது போல் பீகார் மாநில சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாருக்கு வியூகம் வகுத்து தந்து அவரும் வெற்றி பெற்றார். பின்னர் பிரசாந்த் கிஷோர் ஆந்திராவுக்கு சென்றார். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போதில் இருந்தே ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் வகுத்து தந்தார்.

கட்சியிலிருந்து நீக்கம்
இதன் காரணமாக சந்திரபாபு நாயுடுவின் அனுபவத்தை வயதாக கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி அவரை தோற்கடித்து ஆட்சி அமைத்தார். அடுத்தபடியாக டெல்லியில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரசார யுக்திகளை வகுத்து தந்தார். இதனால் ஆம் ஆத்மி 3 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தது. இதனிடையே பிரசாந்த் கிஷோர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பியதை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதிகாரப்பூர்வம்
இந்த நிலையில் தமிழகத்திலும் கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரும் சந்தித்து கொண்டனர். இதனால் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருவரும் சேர்ந்து பணியாற்றுவர் என கூறப்பட்டது. ஆனால் திமுகவுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்றவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தல்
டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு அந்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். தற்போது டெல்லி தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சியில் உள்ள பிரசாந்த் கிஷோரின் அடுத்த டார்க்கெட் கொல்கத்தாவும் சென்னையும்தான். அடுத்த ஆண்டு இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் பிகே செம பிஸியாகிவிடுவார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக











Click it and Unblock the Notifications