மகளிர் உரிமைத் தொகை மட்டும் வெற்றியை கொடுக்காது.. ஆர்.எஸ்.பாரதிக்கு பிரவீன் சக்ரவர்த்தி பதில்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் முன் இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில் 4 மட்டுமே வெற்றி, 5 தோல்வி என்றும் பிரவீன் சக்ரவர்த்தியும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்று பேசிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதில் பிரவீன் சக்ரவர்த்தி ஒரு படி மேல் சென்று, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சியில் பங்கு கொடுக்க ஒப்புக் கொள்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு மட்டும் என்ன ஸ்பெஷலா என்று கொந்தளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகுதிப்பாக ரூ.2 ஆயிரம் என்று ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆர்.எஸ்.பாரதி பதிலடி
இதன்பின் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ஆட்சியில் பங்கு தொடர்பாக ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை, கார்கே ஆகியோர் கேட்டால் பதில் அளிக்கலாம். மற்றவர்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஆட்சியில் பங்கு என்று பேசியவர்கள் நாளை முதல் கேட்க மாட்டார்கள். அவர்கள் இனி கூட்டணியில் சீட் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
பிரவீன் சக்ரவர்த்தி பதில்
இதன் மூலமாக திமுக ஆட்சியில் பங்கு கொடுக்க முன் வராது என்பது திட்டவட்டமாக கூறியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். அதனை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
எந்தெந்த மாநிலங்கள்?
ஆனால் அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய ம்,ஆநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வி அடைந்தன. என்று தெரிவித்துள்ளார். அதில் ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் பிஆர்எஸ், சட்டீஸ்கரில் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார்.
திமுக கள செயல்பாடு
மத்தியப் பிரதேசத்தில் பாஜக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் , மகாராஷ்டிராவில் பாஜக, பீகாரில் பாஜக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ் பாரதியின் கருத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி இந்த பதில் அளித்துள்ளார். ஆனால் திமுக களத்திலும் கடுமையாக பணியாற்றி வருவதோடு, அடுத்தடுத்த மாநாடு, பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திப்பது என்று மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications