சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் நிறைமாத கர்ப்பிணி.. தங்கப் பதக்கம் வெல்வாரா?.. யார் இந்த ஹரிகா?
சென்னை: சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா கலந்து கொள்கிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரததில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பாக 30 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

ஆந்திரா
இந்த போட்டியில் மகளிர் சீனியர் பிரிவில் ஆந்திராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா (31) கலந்து கொள்கிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள போதிலும் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளது அந்த விளையாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் பற்றையும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கடமை உணர்வும் தெரிகிறது.

சர்வதேச தர வரிசை
இவர் சர்வதேச தர வரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் தங்கப்பதக்கம் வெல்ல ஆயத்தமாகி வருகிறார். ஹரிகா தனது 10 ஆவது வயதிலேயே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர். ஹரிகாவின் இந்த சாதனையை பாராட்டி, 2008ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது கிடைத்தது.
Recommended Video

உலக செஸ் சாம்பியன்
இதையடுத்து 2012, 2015, 2017 ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இதுகுறித்து ஹரிகா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் செஸ் ஒலிம்பியாட்டுக்கு தயாராவது மிகவும் சிறப்பான விஷயம். எனது உடல் நலனையும் ஒலிம்பியாட்டுக்கு தயாராவதையும் சம நிலையில் வைத்திருக்கிறேன்.

குடும்பத்தினருக்கு நன்றி
எனக்கு ஆதரவாக இருந்து வரும் எனது கணவர் கார்த்தி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி என கூறியிருந்தார். ஹரிகாவுக்கு அவருடைய பயிற்சியாளர் அபிஜித் குந்தே மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் உள்ளிட்டோரும் ஆதரவாக இருந்து வருகிறார்கள். வெற்றிக்கு பெயர் பெற்ற மாமல்லபுரத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் 30 வீரர்களும் வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications