அறிவாலயத்தில் பிரேமலதா: 10+1 சீட் ரகசியம்.. அமித்ஷா டாஸ்க்கை கோட்டை விட்ட எடப்பாடி.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த இணைப்புக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது யார்? இதனால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் என மொத்தமுமே பரபரப்பை கிளப்பி விட்டுள்ளன..
திமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைந்துள்ள சூடு இன்னமும் அரசியல் களத்தில் குறையவில்லை.. தேமுதிக அறிவாலயத்தில் கால் வைக்க காரணமே, திமுகவின் திட்டமிட்ட பேச்சுவார்த்தைகளும், அதிமுகவின் பிடிவாதமான அணுகுமுறையும்தான் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

தேமுதிக திமுக கூட்டணி
குறிப்பாக திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் தேமுதிகவுடன் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்..
காரணம், வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கை சமாளிக்கவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் வாக்குகளை உறுதி செய்யவும் தேமுதிகவின் வருகை அவசியம் என திமுகவின் மண்டலப் பொறுப்பாளர்கள் அழுத்தம் கொடுத்ததே இந்த முயற்சிக்கு வித்திட்டது.. அதேபோல் தென் மாவட்ட அமைச்சர்களான தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களும் தேமுதிகவை உள்ளே கொண்டு வர வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டனர்..
பிரேமலதா விஜயகாந்த்
தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை தேமுதிக தொடக்கத்தில் 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் எனக் கோரிக்கையை முன்வைத்தது.. திமுக தரப்பில் 6 இடங்களிலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி, படிப்படியாக 9 இடங்களுக்கு நகர்ந்து, இறுதியில் விஜயகாந்துக்கு ராசியான 5 என்ற எண்ணைக் குறிக்கும் வகையில் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது..
இதனிடையே, மகா சிவராத்திரி அன்று கோவை ஈஷா மையத்திற்கு சென்ற பிரேமலதா, அங்கு தியானம் செய்துவிட்டு வந்த பிறகே திமுக கூட்டணியை இறுதி செய்யும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது..
தனது முடிவை உறுதிப்படுத்தும் விதமாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற அவர், அங்குள்ள மணியை 5 முறை அடித்து மரியாதை செலுத்திவிட்டு, தொகுதி விவரங்களை முதல்வர் ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.. அதன்படியே அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டன..
இன்னொருபுறம், தேமுதிகவை தங்கள் கூட்டணியில் தக்கவைக்கும் பொறுப்பை பாஜக மேலிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்திருந்தது..
அமித் ஷா தந்த டாஸ்க்
அமித் ஷா கொடுத்த இந்த முக்கியப் பணியில் எடப்பாடி பழனிசாமி போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும், பிரேமலதா கேட்ட தொகுதிகளை வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது..
அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததால், தேமுதிக அதிருப்தி அடைந்தது.. பாஜகவின் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும், எடப்பாடி பழனிசாமியின் மெத்தனப் போக்கினால்தான் தேமுதிக நழுவி திமுக பக்கம் சென்றுவிட்டதாகவும், இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.. மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு வலுவான வாய்ப்பைக் கோட்டை விட்டுவிட்டதாகவே பாஜக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்..
தேமுதிகவின் இந்த திடீர் வருகையால் திமுக கூட்டணியில் உள்ள மெஜாரிட்டி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன..
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதால் தங்களது தொகுதிகள் பறிபோகுமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
ஆனால் வட மாவட்டங்களில் பாமக மற்றும் அதிமுகவின் பலத்தைக் குறைக்க தேமுதிகவின் வாக்கு வங்கி அவசியம் என திமுக தலைமை அவர்களை சமாதானப்படுத்தி வருகிறது.. மொத்தத்தில் தேமுதிகவின் இந்த கூட்டணி மாற்றம் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி












Click it and Unblock the Notifications