தேமுதிக பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா.. கையை பிடித்து தொண்டர்களிடம் அறிவித்த விஜயகாந்த்
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டு ஏகமனதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலில் விழுந்து ஆசி பெற்ற பிரேமலதாவின் கையை பிடித்து தொண்டர்களிடம் அறிவித்தார் விஜயகாந்த்.
உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பினார். அவர் பூரண குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, வீடு திரும்பிய அடுத்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் விஜயகாந்த் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

அதன்படி, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர் தொடங்கி பகுதி கழக செயலாளர்கள் வரை அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது, அவசர அவசரமாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படுவது ஏன் என கேள்வி எழுந்தது.
கட்சியில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவிற்கு செயல் தலைவர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவி கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவிக்கப்பட்ட உடன் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரேமலதா. இதனையடுத்து பிரேமலதாவின் கையை பிடித்து உயர்த்தி தொண்டர்களிடம் காண்பித்தார் விஜயகாந்த். அப்போது தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று உற்சாக குரல் எழுப்பினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications