விஜயகாந்திற்கு இப்தார் நோன்பு கஞ்சி ஊட்டிய பிரேமலதா! கேப்டன் சிலையில் செய்த மற்றொரு செயலால் உருக்கம்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜயகாந்தின் திருவுருவச் சிலைக்கு அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா நோன்பு கஞ்சி ஊட்டிவிட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் இஸ்லாமிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த இந்த விழாவையொட்டி தேமுதிக வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
புனிதம்
புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
தேமுதிக இஃப்தார் நோன்பு
வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) (22.03.2025) சனிக்கிழமை மாலை 6 மணியாவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இஸ்லாமிய மக்கள்
அது சமயம் இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜயகாந்த் நினைவிடம்
இந்த அறிக்கையின்படி நேற்று கேப்டன் ஆலயத்தில் மூத்த நிர்வாகிகளும் இஸ்லாமிய தலைவர்களும் சிறுவர், சிறுமியர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜயகாந்த் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கேப்டன் ஆலயம்
அது போல் அவருடைய மார்பளவு வெண்கலச் சிலையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் கேப்டன் சிலை முன்பு நோன்பு திறக்கும் நிகழ்வை பிரேமலதா நடத்தி வைத்தார். இதையடுத்து இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு முன்னர் பிரார்த்தனையை நடத்தினர்.
பிரார்த்தனை
அப்போது பிரேமலதாவும் பிரார்த்தனை செய்து ஒரு கப்பில் வைக்கப்பட்டிருந்த நோன்பு கஞ்சியை ஸ்பூனில் எடுத்து விஜயகாந்திற்கு ஊட்டி விட்டார். இதனால் அந்த பகுதியில் நெகிழ்ச்சி ஏற்பட்டது. மேலும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து ஆரத்தி காட்டினார்.
நோன்பு கஞ்சி
பின்னர் விஜயகாந்தின் கன்னத்தை வருடினார். இந்த மகிழ்ச்சியுடன் கட்சி அலுவலகத்தினுள் நோன்பு கஞ்சி அருந்தும் நிகழ்வில் பிரேமலதாவும் சுதீஷும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கேப்டன் ஆலயத்தில் இன்றும் அன்னதானம் நடத்தப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகை
அது மட்டுமல்லாமல் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளின் போதும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக கட்சி தொடக்க விழாக்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்னதானம்
அன்றாடம் விஜயகாந்தின் சிலைக்கும் நினைவிடத்திற்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. விஜயகாந்த் இறந்த போது வெளிநாட்டில் புத்தாண்டுக்காக சென்ற பிரபலங்கள் அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தனர். இதனால் சென்னை வந்ததும் தங்கள் வீட்டிற்குக் கூட போகாமல் நேராக விஜயகாந்தின் வீட்டிற்கு போய் அங்கிருந்து விஜயகாந்தின் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிலர் கேப்டனை நினைத்து கண்ணீர் விட்டு வருகிறார்கள். வெளியூர்களில் இருந்தும் சாரை சாரையாக மக்கள் வந்து விஜயகாந்த் சமாதியை பார்த்த வண்ணம் உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications