கேப்டனுக்கு செல்லப் பெயர் வைத்த மோடி.. லைஃப்ல மறக்க மாட்டேன்! ஓபனாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் கேப்டனுக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி விஜயகாந்துக்கு இணை விஜயகாந்த் மட்டும் தான். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மக்களால் தங்கள் வீட்டு பிள்ளை போல பார்க்கப்பட்டவர். கேப்டன் என அவரை அனைத்து தரப்பு மக்களும் அன்போடு அழைத்தனர்.

Premalatha Narendra Modi Vijayakanth

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற அவர் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது உடல் நல பிரச்சனைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து இறுதிக் காலத்தில் ஒதுங்கி இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது மறைவை அடுத்து தமிழகமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து அவரை வழி அனுப்பி வைத்தனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இன்று வரை அதிகமான மக்கள் வந்து செல்வதில் இருந்தே மக்களிடையே அவருக்கு எந்த அளவு செல்வாக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். அரசியலைத் தாண்டி பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தவர் விஜயகாந்த்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் கன்னத்தை தடவி கொடுத்து கட்டியணைத்து வாழ்த்து பெற்றதை மறக்க முடியாது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விஜயகாந்துக்கும் இருந்த உறவு குறித்து நெகழ்ச்சியுடன் பேசி இருக்கிறார் தேமுதிக பொது செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்.

மோடி ஸ்டோரி என்ற சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர்,"கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. 'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று." என பேசியுள்ளார். மேலும், இந்த பேட்டியை அவர் தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணி இருந்த நிலையில் அதற்கு பிறகு தேமுதிக பாஜகவில் இருந்து விலகி மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்தது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தேமுதிகவும் அதில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி இருப்பதன் மூலம் பிரேமலதாவும் பாஜக அதிமுக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+