“மக்கள் கோபத்தில் உள்ளனர்.. தேர்தல் பரப்புரை போல முதலமைச்சர் விஜய் பேசக்கூடாது".. பிரேமலதா அட்டாக்!
சென்னை: "விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல இல்லாமல் ஆக்கப்பூர்வமாக முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகும் நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து விமர்சனங்களை தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் முன் வைத்து வருகிறார். அந்தவகையில் இன்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரேமலதா.

பிரேமலதா பேசுகையில், "முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரைகளில் பேசியது போல பேசக்கூடாது. ஆக்கப்பூர்வமாக முதலமைச்சர் பேச வேண்டும், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதனால் எந்த விவசாயியாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? பயன்பெறுகிறார்களா ? இல்லை. நம்மால் நிறைவேற்ற முடியும் என்றால் மட்டுமே தான் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும்.
முதல்வர் விஜய் அறிவித்தது போல 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருக்கிறதா? விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. இன்று வரை மூடவில்லை என மக்கள் என்னிடம் சொன்னார்கள். உடனடியாக ஆய்வு செய்து பாருங்கள். மூடவில்லை என்றால் இது வெறும் கண்துடைப்பு என மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications