“ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு! கடைசியில்..” பெட்ரோல் குண்டு வீச்சால் சீறிய பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
சென்னை கிண்டி சர்தார்படேல் சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. அதாவது ஆளுநர் மாளிகை முதலாவது நுழைவு வாயில் எதிரே மர்மநபர் ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அவரை விசாரிப்பதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த இரண்டு பாட்டில்களை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியிருக்கிறார் அந்த மர்ம நபர். இந்த பாட்டில்கள், மாளிகையின் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பக்கத்தில் விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது. போலீசார் உடனே தீயை அணைத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒப்படைத்தனர். கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால்தான் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இவர் ஏற்கெனவே கடந்த 2022ம் ஆண்டு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போதும் குண்டு வீச்சில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மறுபுறம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் மாநில அரசை கடுமையாக சாடியிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது, "கோவை, மதுரை, கன்னியாகுமாரி, தூத்துக்குடி இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்து கொண்டிருந்தன. இந்த விஷயத்தில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து, கடைசியில் மனிதர்களே கடித்ததை போல இன்று ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
தற்போது தமிழ்நாட்டுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்திருக்கிறார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்கி இருக்கிறார். இப்படி இருக்கையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தலை குனிவு. எப்போதும் திமுக வந்தால் வன்முறையை கையில் எடுக்கும் என்பது வரலாறு. ஆனால் இது குறித்து விளக்கம் கேட்டால் பாஜகதான் குற்றவாளியை பெயிலில் எடுத்தது என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பிடம் கேட்டால் திமுகதான் பெயிலில் எடுத்தது என்று கூறுகிறார்கள்.
இந்த சம்பவத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறையும், என்.ஐ.ஏ-வும் கண்டுபிடித்து தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் இதுவே கடைசி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி இது போன்று ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தற்போது தற்போது நடந்த சம்பவத்தை கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications