மீண்டும் பழையபடி..! பிரேமலதா எடுத்த முக்கிய முடிவு! தேமுதிகவினருக்கு பறந்த உத்தரவு!
சென்னை: விஜயகாந்த் மறைந்து நாளையும் சரியாக 1 மாதம் நிறைவடையும் நிலையில், தேமுதிகவினருக்கு பிரேமலதா முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடியை நாளை முழுக்கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க வைக்க வேண்டும் என பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னணித் தலைவர்கள் மறைந்தால் அந்தந்த கட்சியில் பொதுவாக 3 நாட்கள் அல்லது 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம். விஜயகாந்துக்காக அவரது கட்சியினர் 1 மாத காலம் துக்கம் அனுசரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாளைய தினம் விஜயகாந்த் நினைவிடத்தில் சில சம்பிரதாய சடங்குகளும் நடைபெறவுள்ளன. பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே தமிழகம் தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கவுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். ஏற்கனவே அவர் கிராமம் கிராமமாக தாம் பயணித்து மக்களை சந்திக்கவுள்ளதாக விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அதேபோல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான பணிகளையும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications