“2026ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியா?” பிரேமலதா சொன்ன பதில்!
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். தேமுதிக அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை. மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில், உள்ளம் தேடி இல்லம் நாடி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மதுரை கூடல் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பிரேமலதா, "கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வராத சூழலில், ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக உள்ள ஒரே கட்சி தேமுதிக கட்சி. அனைத்து தொகுதிகளிலும் பூத் முகவர்கள் உள்ள கட்சி தேமுதிக. ஒவ்வொரு பூத் முகவர்களும், நம்முடைய கட்சியை சேர்ந்தவர்களுக்கு SIR படிவத்தில் வாக்காளர் அடையாள அட்டையை உறுதி செய்ய வேண்டும்.
கேப்டனின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் மதுரையிலிருந்து தொடங்கியது. 1990 மதுரையில் தான் விஜயகாந்த் உடன் எனக்கு திருமணம் நடந்தது. 2005 ஆம் ஆண்டு கேப்டனின் தேமுதிக அரசியல் கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடந்தது. மதுரையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நான் பணியாற்றியுள்ளேன். 2011-ல் தேமுதிக மதுரையில் இரண்டு இடங்களில் வென்றது. அதன் பிறகு ஆளுங்கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் பயத்தை ஊட்டி வருகிறது தேமுதிக.
வாழ்க்கை ஒரு வட்டம். மேலிருப்பவர்கள் கீழே வந்து தான் ஆக வேண்டும். கீழேயிருப்பவர் மேலே சென்று தான் ஆக வேண்டும். வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், நம் இலக்கை அடைவோம். அதிக தொகுதிகளை பெற்று தொண்டர்கள் விருப்பப்படி மாபெரும் கூட்டணி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைச்சரவை அமையும் என்று பலர் கூறியுள்ளனர். எனக்கு அப்போது ஒரு நிலை வரும்போது, நம் கட்சி தொண்டர்கள் எம்எல்ஏ கிடையாது மந்திரி ஆகும் வாய்ப்புள்ளது. எனவே வரலாறு படைப்போம்.
வரவிருக்கும் தேர்தலுக்கு தயாராகுவோம். இரண்டாம் குருபூஜைக்கு அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும். மாநாட்டிற்கும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் வர வேண்டும். தற்பொழுதே வாகனங்களுக்கு, தொண்டர்கள் புக் செய்து விடுங்கள். வாகனங்கள் கிடைக்காது என்று சொல்லக்கூடாது. இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான நகரம் மதுரை ஆக உள்ளது. மதுரையில் ஊழல் செய்து மேயர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்கள்.
விஜயகாந்த் மாதிரி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். விஜயகாந்த் முதலமைச்சர் ஆக இருந்தால் கூட, ஏதாவது லஞ்ச புகாரை, எதிர்க்கட்சியினர் கூறியிருப்பார்கள் அதனால் தான் அவர் ஆகவில்லை போல. எதிர்க்கட்சி தலைவராகவே இருந்து மக்கள் மனதில் முதல்வராக இடம்பெற்றுள்ளார்" எனப் பேசியுள்ளார்.
"மதுரை மத்திய தொகுதியில் போட்டியா?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்தந்த மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்பது மாவட்டச் செயலாளர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், யார் எங்கு போட்டியிடப் போகிறார்கள் என்பதை இன்றைக்கு சொல்ல முடியாது" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications