கேப்டனின் ராஜதுரை படத்தின் காப்பியா GOAT? விஜய்யிடம்தான் கேட்கணும்! பிரேமலதா பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டனின் ராஜதுரை படத்தின் காப்பியா கோட் படம் என பிரேமலதா விஜயகாந்தை கேள்வி எழுப்பிய நிலையில் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் இருப்பதாக உதயநிதி சொல்லியிருக்கிறார். அது குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறதா, இல்லை கேள்விக்குறியா இருக்கிறதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

premalatha vijayakanth vijay

இன்று எல்லா துறைகளிலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் ஆட்சியாளர்கள் அப்படித்தான் சொல்வார்கள். உண்மையில் நல்லாட்சி நடைபெறுகிறதா என்பதை மக்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

கோட் படத்தில் விஜயகாந்தின் அறிமுக சீன், அவருடைய படமான ராஜதுரை படத்தை போல் உள்ளதாக சொல்கிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா, நான் இன்னும் கோட் படத்தை பார்க்கவில்லை. பார்த்தவுடன் என் கருத்தை சொல்கிறேன் என்றார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டு வருவது கண்டித்தக்க விஷயமாகும். எப்போது கச்சத்தீவை மீட்கிறோமோ அன்றுதான் மீனவர்களுக்கு விடிவுகாலம்! கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது திமுக. இன்று அவர்களின் ஆட்சிதான் நடக்கிறது. இந்த கேள்வியை திமுக அமைச்சர்கள், முதல்வர், உதயநிதி ஆகியோரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

தொடர்ந்து மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. விஜய்யின் மாநாட்டிற்கு ஏன் தாமதமாகிறது என்பதை அவரோ அவருடைய கட்சி நிர்வாகிகளோதான் பதில் சொல்ல வேண்டும்.

நம் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றுகிறோம். ஆனால் கேப்டன் விஜயகாந்த், எல்லாரும் எல்லா மொழிகளையும் கற்க வேண்டும் என்றுதான் அவர் சொல்வார். "அனைத்து மொழி கற்போம். அன்னை மொழி காப்போம்" என்பதுதான் அவருடைய கொள்கை. எனவே தேசியக் கல்விக் கொள்கையை மாநில அரசு ஏன் எதிர்க்கிறது.

தமிழகத்திற்கு தேவையான நிதியை ஏன் மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதை மத்திய, மாநில அரசுகள்தான் பதில் சொல்ல வேண்டும். விஜய் வருகையால் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் சிதறும் என பாஜகவின் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் வரட்டும், அப்போது பார்க்கலாம்.

அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெற போயிருக்கிறாரா. இல்லை முதலீடுகளை ஈர்க்க போயிருக்கிறாரா என்பது தெரியவரும். ஏற்கெனவே துபாய், சிங்கப்பூருக்கெல்லாம் போயிருக்கிறார். இதுவரை தமிழகத்தில் எத்தனை ஆலைகள் தொடங்கப்பட்டன, எத்தனை பேர் வேலைவாய்ப்புகளை பெற்றனர் என்பதை அவர் வெள்ளை அறிக்கையாக சொல்ல வேண்டும். அவர் தமிழகம் திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்பதை நீங்கள் திமுகவிடம் கேட்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+