வெற்றிக்கனியை கேப்டன் பாதத்தில் சமர்ப்பிக்க இந்த நல்ல நாளில் சூளுரைப்போம்! - பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நமது கேப்டனின் கனவை வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள் தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என இந்த நல்ல நாளில் சூளுரைப்போம் எனப் பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 28ஆம் தேதி (நேற்று) காலமானார். அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

இதனால் கோயம்பேடு ஸ்தம்பித்ததன் காரணமாக, இன்று காலையில் விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடல் நல்லடக்கம்: முன்னதாக, விஜயகாந்த் உடல் இன்று மாலை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த்தின் உடலுக்குஅரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து, அவரது குடும்ப சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. கண்ணீர் மல்க அவரது மகன்கள் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்கச் செயின், மோதிரம், கண்ணாடி அணிந்தே சந்தனப்பேழைக்குள் வைக்கப்பட்டார். பின்னர், செயின், கண்ணாடியை பிரேமலதா கழற்றி வைத்துக்கொண்டார். கட்சிக்கொடி மோதிரத்துடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், சாலைகளில், மேம்பாலங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் செல்போன் டார்ச் ஒளி மூலம் கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர். கேப்டன் விஜயகாந்த்தின் நல்லடக்கம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்போடு சிறப்பான முறையில் நடந்தேறியது. பின்னர், பிரேமலதா விஜயகாந்த் மைக்கில் பேசினார்.
பிரேமலதா பேச்சு: அப்போது பேசிய அவர், “கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இடம் ஒதுக்கி கொடுத்து இறுதி ஊர்வலத்திற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பாக நன்றி. கேப்டனின் இறுதி ஊர்வலம் நடைபெற உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல வழி நெடுக கேப்டனுக்கு வரவேற்பு கொடுத்த அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், ரசிகர்களுக்கு நன்றி.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை நமது கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்த புள்ளி விவரங்களின் படி 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நமது கேப்டன் செய்த தர்மமும் அவரின் நல்ல எண்ணமும், உதவும் குணமும் தான் காரணம்.
கேப்டனின் மோதிரம்: மலர் தூவி அவரை சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய அளவுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் எல்லோரையும் இறுதிச் சடங்கிற்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், உங்கள் எல்லோருக்கும் தெரியும், இது சிறிய இடம். முதல்வர், அமைச்சர்கள், விஐபிகள் பலரும் வந்திருந்தார்கள். நிகழ்வில் பங்கேற்ற அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் நன்றி. இறுதி அஞ்சலி செலுத்தவந்த அனைத்து தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நன்றி.
உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். கேப்டன் கட்சி மோதிரம் போட்டிருப்பார், அது அவர் கையிலேயே இருக்கட்டும் என்று, அந்த மோதிரத்துடனும், கட்சி வேட்டியுடனும் நம் தலைவரை அடக்கம் செய்துள்ளோம். தொண்டர்களின் பாதம் பணிந்து உங்கள் அண்ணியாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நம் தலைவரை இழந்திருக்கிறோம். ஆனால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நமது தலைவரின் கனவை நிச்சயமாக வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள் தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை இந்த நல்ல நாளில் நாம் அனைவரும் சேர்ந்து சூளுரைப்போம். உறுதியேற்போம்.
சூளுரை: எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி அமைத்திருக்கிறார்களோ அதேபோல தலைவருக்கும் இங்கு நிரந்தரமாக சமாதி அமைக்கப்பட்டும். கேப்டன் விஜயகாந்துக்கு நம்பர் 1 தரத்தில் தரத்திலான நினைவிடம் அமைக்கப்படும். 24 மணி நேரமும் விளக்கேற்றி, ஒட்டுமொத்த தொண்டர்களும் வழிபட்டு தினமும் பூஜை செய்யும் கோவிலாக இருக்கும். கேப்டன் எங்கும் போகவில்லை. அவர் நம்மில் ஒருவராக நம்முடன் தான் இருக்கிறார்.
ஒரு விஷயம் சொல்றேன்.. கேப்டன் அணிந்திருந்த தேமுதிக கொடி மோதிரத்துடனே அடக்கம்.. பிரேமலதா உருக்கம்!
நீங்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய்ச்சேர வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. உங்கள் கேப்டன் சொல்வதைத்தான் உங்கள் அண்ணியும் சொல்வேன். நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீடு சென்று சேரும் உங்களையே நினைத்துக் கொண்டிருப்பேன். நமது முரசு வெற்றி முரசாக தமிழ்நாடு முழுக்க ஒலிக்கட்டும். வெற்றிக் கனியை கேப்டனின் பாதத்தில் சமர்ப்பிப்போம்” எனத் தெரிவித்தார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications