கம்முனு இருக்கணும்.. தெரியுதா... போயா... "தூ".. மறக்க முடியாத "கேப்டன்"!
விஜயகாந்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒரு பார்வை
சென்னை: செய்தியாளர்களை அவமதித்து நடந்து கொள்வது ஒன்றும் தேமுதிகவுக்கு புதிது கிடையாது. விஜயகாந்த் சிறுவர்களிடம் கூட ஃபேமஸ் ஆனதே செய்தியாளர்கள் கூட்டத்தில் நடந்து கொண்ட விதத்தினால்தான்! அதுவே விஜயகாந்த்தை ஒரு ஜோக்கர் போல பார்க்கும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பது வேறு விஷயம்!
சில வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் பேட்டி என்றாலே கசக்கத்தான் செய்தது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கேள்வியை கேட்டால்கூட, அதற்கு சிடுசிடுவென இருப்பதுதான் அது.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி தந்தார். ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டதற்கு "நீ போகும் வரை நான் பேச மாட்டேன். கம்முனு இருக்கணும். தெரியுதா? ஒழுங்கா பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கிறேன். உனக்கு கொடுக்கணும் ஒன்னும் அவசியமில்லை. நா பட்டுபட்டுனு பேசுவேன். போயா...!" என்றார் ஆவேசமாக.

கொம்பா முளைச்சிருக்கு
இதற்கடுத்து 2015 ஏப்ரல் மாதம், மேகதாது சம்பந்தமாக பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். அப்போது பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கி கொண்டிருந்தார். அது சம்பந்தமாக நிருபர்கள் கேள்வி கேட்டு கொண்டே இருந்தனர். அப்போது ஒரு எரிச்சல் விஜயகாந்த் முகத்தில் வெளிப்பட்டது. "உனக்கு கொம்பா முளைச்சிருக்கு, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே...?" என்றார். ஒரு கட்டத்தில் "உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... சொன்னதை கேக்கலைன்னா மைக்கை தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ" என்றார்.

சென்னை ஏர்போர்ட்
இதன்பிறகு ரொம்பவும் ஹைலைட் ஆனது 2012 அக்டோபரில் சென்னை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்தான் ஜெயலலிதா உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, "இந்தக் கேள்விகளை ஜெயலலிதாவிடம் போய் கேளு.. உன் பத்திரிகை எனக்கு சம்பளமாடா தருது, நாயி!" என்று சொல்லி அவரை அடிக்க பாய்ந்தார். "உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்கு கிடையாது.. பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா...." என்றார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.

வருத்தம் இல்லை
பத்திரிகைகாரர்களை இப்படி ஒருமையிலோ அல்லது மரியாதையின்றி பேசியதற்கோ விஜயகாந்த் இதுவரை வருத்தம்கூட தெரிவித்தது இல்லை. அப்போதே அவர் வருந்தியிருந்தால் இன்றைக்கு அந்த குடும்பத்தில் பிரேமலதா இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்.

கருணாநிதி
எம்ஜிஆர் ஆகட்டும் கருணாநிதி ஆகட்டும் பத்திரிகையாளர்களை கண்ணியத்துடன் நடத்தினார்கள். வயதில் எவ்வளவோ குறைந்த பத்திரிகையாளர்களைக் கண்டாலும் அவரது உடல்பலம் அனுமதித்தவரை எழுந்து நின்று வரவேற்கும் மாண்புடையவராக இருந்தார் கருணாநிதி. வயது குறைந்த இளைஞர்களாக இருந்தாலும் ஒருமையில் அழைக்காத உயர்ந்த பண்பாளராக இருந்தார். இதையெல்லாம் கட்சி நடத்துகிறோம் என்று சொல்லி கொள்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமான பாடம் ஆகும்!
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications