வணிக சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் விலை இவ்வளவா? ஆண்டின் முதல் நாளிலேயே வணிகர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டின் முதல் நாளிலேயே ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,892க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, இன்று முதல் ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வணிக உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும் .இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
2023ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாதத்துக்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் 2023ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ரூ.1,892 விற்பனையான வணிக சிலிண்டர், தற்போது ரூ.1,917யாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் மற்ற மாநிலங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,768ஆகவும், மும்பையில் ரூ.1,721ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,870க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, உணவகங்கள், தேநீர் கடைகள் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications