5 லிட்டர் ஆவின் பால் விலை உயர்வு.. ரூ.10 வரை உயர்ந்ததால் அதிர்ச்சி.. டீ, காஃபி விலை உயரும் அபாயம்
சென்னை: 5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால், உணவகங்களில் டீ, காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பால் அவசியான உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஓட்டல், டீக்கடைகளிலும் டீ, காபி ஆகியவற்றிற்கும் பால் அத்தியாவசிய பொருளாக உள்ளது. உணவக தொழிலில் ஈடுபட்டுவள்ளவர்கள் அதிக அளவில் பாக்கெட் பாலை தான் வாங்குகிறார்கள்.

தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் சார்பில் 27 மாவட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப்புற பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலை கொள்முதல் செய்து, ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் பதப்படுத்தி, தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் மெஜந்தா நிறத்திலும், சமன்படுத்தப்பட்ட பால் நீல நிறத்திலும், நிலைப்படுத்தப்பட்ட பால் பச்சை நிறத்திலும், கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஆரஞ்சு நிறத்திலும், டீ மேட் - கொழுப்புச் சத்து நிறைந்த பால் சிவப்பு நிறத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் தனியார் நிறுவனங்களும் பால் விற்பனியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஆவின் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 5 லிட்டர் கொள்ளவு கொண்ட பச்சை பாலின் விலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது. தற்போது, 5 லிட்டர் பச்சை பால் தற்போது ரூ.210 ஆக விற்பனையாகி வரும் நிலையில், இனி ரூ.220க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு அரை லிட்டர், ஒரு லிட்டர் என வாங்கும் இல்த்தரசிகளை பாதிக்காது என்றாலும் வணிக ரீதியாக வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
ஏனெனில், ஹோட்டல் உள்ளிட்ட உணகங்களில் இதுபோன்ற அதிக கொள்ளவு கொண்ட பால் பாக்கெட்டுகளை வாங்கியே பயன்படுத்துகிறார்கள். இதனால், ஆவின் பச்சை பால் விலை உயர்வால் டீ, காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,டீ, காஃபி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications