எடப்பாடிக்கு பதில் "அவர்".. இறங்கி வரலைன்னா! அதிமுகவில் எழும் பூகம்பம்.. மோடியின் "புத்தாண்டு சபதம்"
சென்னை: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில். 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ.20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.
விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ் மொழி: தமிழ்நாட்டுக்கு வரும்போது புதிய சக்தி கிடைக்கிறது உலகில் எங்கே பேசினாலும் தமிழ்நாட்டை, தமிழ் மொழி பெருமையை பேசுகிறேன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தினோம்.

தமிழ் மொழி கலாசாரம், மொழி தொடர்பான உற்சாகம் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
மோடி - எடப்பாடி மோதல்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அப்படி சந்திப்பு நடத்தவில்லை.
சென்னையில் சமீபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் கூட பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பேசி இருந்தார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் உறுதியாக உடைத்து பேசி இருந்தார்.

அதோடு 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.
அப்செட்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதன் விளைவாக வரும் நாட்களில் அதிமுகவில் சில அதிரடிகள் நடக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டில் இருந்து எடப்பாடியை பாஜக வேறு மாதிரி இனி ட்ரீட் செய்யும். சசிகலா மீண்டும் எழுச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் முதல்வர் வேட்பாளராக வேறு ஒரு புள்ளியை உள்ளே கொண்டு வர பாஜக முயற்சி செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன் எடப்பாடிக்கு பாஜக பெரிய அளவில் பிரஷர் போடும்.. அவர் இறங்கி வரவில்லை என்றால் சசிகலா அதிமுகவில் ரிட்டர்ன் ஆகும் காட்சிகள் கூட நடக்கும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications