செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. மணல் ஓவியத்தில் இணைந்த நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி - முதமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை மணல் ஓவியமாக சர்வம் படேல் வரைந்தது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
Recommended Video
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டுள்ளார். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், கொடி அணிவகுப்பு ஆகியவை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மணல் ஓவியக் கலைஞர் சர்வம் படேல், மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோவில் ஆகியவற்றை மணல் ஓவியமாக வரைந்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஒன்றாக இணைத்து மணல் ஓவியமாக வரைந்தார். அரசியலில் எதிர் எதிர் கோட்பாடுகளில் செயல்பட்டு வரும் முக்கியத் தலைவர்களை ஒன்றாக இணைத்து மணல் ஓவியமாக வரைந்தது பார்வையாளர்கள் முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications