”டார்கெட் தமிழ்நாடு” 4 மாதத்தில் 7 முறை விசிட்..! பிரதமர் மோடியிடம் சொன்னது யார்? இது தான் ப்ளானா?
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் பெரிதா? கோடை வெயிலின் தாக்கம் பெரிதா? என மக்களே குழம்பும் வகையில் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு பிரசார யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கட்சியான பாஜகவும் தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும் என்பதற்காக பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் மேற்கொண்ட பயணத்தின் தொகுப்பை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில் தேசிய தலைவர்களின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது.

குறிப்பாக பாஜக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை பிரதமர் நரேந்திர மோடி மட்டும் ஏழு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பிரதமர் மோடி: மோடியின் பயணத்திட்டம் என்ன இந்த பயணங்களில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்ன என்பது குறித்து நமக்கு கிடைத்த சிறப்பு தகவல்களை விரிவாக பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே பலமுறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருக்கிறார். இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த ஆண்டுகளிலும் பிரதமர் மோடியின் தமிழக பயணங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் காசி தமிழ்ச் சங்கமம் மாணவர்களிடையே உரையாற்றும்போது தமிழ் தமிழ்நாடு குறித்து பேசுவது என பிரதமர் மோடி அதிகம் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ் மொழி மற்றும் அரசியல் குறித்து பேசி இருக்கிறார்.
7 முறை பயணம்: குறிப்பாக ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் குறித்தான பார்வை மிக விரிவாக செய்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் வருகை தந்திருக்கிறார். ஜனவரியில் இருந்து பிப்ரவரி வரையில் மட்டும் மூன்று முறை வந்த பிரதமர் மோடி அதற்குப் பிறகாக தற்போது வரை 7 முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதன்முறை பயணம்: புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அதாவது கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதன்முறையாக இந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அந்த முறை திருச்சிக்கு வந்த அவர் விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கோவில்களில் வழிபாடு: அதனைத் தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர் சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். அது மட்டும் அல்லாமல் 20, 21 ஆகிய தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு: அதற்குப் பிறகு ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி மூன்றாவது முறையாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த தேதியில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அதற்குப் பிறகு மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.
அதற்கு அடுத்த நாள் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் உரையாற்றினார்.
தொடர் பயணம்: அதனைத் தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி நான்காவது முறையாக தமிழகம் வந்த பிரதமர் கல்பாக்கம் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். அன்று மாலையே சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
திமுக மீது விமர்சனம்: அதற்குப் பிறகாக மார்ச் 15ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை வெகுவாக விமர்சித்து பேசினார். அந்தப் பயணத்தின் போது 15, 16 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிரம்மாண்ட ரோடு ஷோ: அதன் பின்னர் ஒருநாள் கழித்து 18அம் தேதி மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவையில் வழக்கமாக பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு பதில், 'ரோடு ஷோ' நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னையில் பேரணி: இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு 7-வது முறையாக அதாவது ஏப்ரல்-9ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி சென்னையில் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். மேலும் வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னணி என்ன?: இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகப் பயணம் குறித்த பல்வேறு தகவல்களை பாஜக நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். அதன்படி கடந்த ஆண்டுகளை விட தற்போது தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருப்பதாக தமிழக பாஜக நிர்வாகிகள், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கின்றனர். அதன்படி தேசிய தலைவர்கள் தமிழகத்தின் பக்கம் கவனத்தை செலுத்தி அதிக முறை பயணம் மேற்கொள்வதும் மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசின் மூலம் இல்லாமல் தாங்களாகவே தொடங்கி வைக்கும் போது மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவது தெரியும்.
முக்கிய மைல்கல்: இது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற வட இந்திய தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர் என்பதால் அதிக முறை அவர் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்வது தங்களுக்கு வாக்கு வங்கியை உயர்த்தும் என தமிழக பாஜக தலைமை அமித்ஷா மூலம் பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், கள நிலவரத்தை உணர்ந்த பிரதமரும் அதற்கு சம்மதித்ததன் பேரிலேயே தொடர் பயணத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சொல்கின்றனர் தமிழக பாஜகவினர்.
2026 சட்டசபை தேர்தல், 2029 லோக்சபா தேர்தல் ஆகியவையும் பாஜகவின் கேம் பிளானில் உள்ளன. வடக்கு கை விட்டாலும் தெற்கில் கொடிநாட்ட வேண்டும். சூப்பர் பவர் மனநிலையில் உள்ள பாஜக வருங்காலத்தையும் சேர்த்தே யோசிக்கும் சொகுசை பெற்றுள்ளது. எனவே இது இப்போதைய தேர்தலுக்கானது இல்லை, வருங்காலத்திற்கான முதலீடு என்று பாஜக உயர்மட்டத்திலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications