திடீரென போன் போட்ட பிரதமர் மோடி.. அப்படி கேட்டது தான் மாயம்.. பூரித்து போன அண்ணாமலை!
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்ததாக தகல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தை அண்ணாமலையே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அங்கு தேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அ சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை சென்னை திரும்பினார்.

அண்ணாமலை சென்னைக்கு திரும்பிய மறுநாளே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருமல், உடல் வலி, தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருந்த அண்ணாமலை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அண்ணாமலைக்கு சுவாசக் குழாயில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். இதன் காரணமாக அண்ணாமலையால், 6-ம் தேதி தொடங்க இருந்த நடைபயணத்தில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து நடைபயணத்தை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்து பாஜக அறிவித்தது.
இதனிடையே, பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு அமைந்தகரையில் திட்டமிட்டபடி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அண்ணாமலை தனது கட்சியினரிடம் பேசும் போது, தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தார் என்றும், அப்போது அவரிடம் தொண்டை வலி உள்ளதாகவும் கூறியதாகவும் தெரிவித்தார்.
அப்போது அண்ணாமலையிடம் பிரதமர் மோடி, நீங்கள் டெல்லி வந்து என் நேரடி மேற்பார்வையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அது என்னுடைய பொறுப்பு.உங்கள் உடம்பு தான் முக்கியம் எனறு கூறினாராம்.
தொடர்ந்து அண்ணாமலை, தான் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக பிரதமரிடம் கூறினாராம். அதற்கு பிரதமர் மோடி சரி என்று கூறி போனை வைத்துவிட்டராம். பின்னர் மீண்டும் பிரதமர் மோடி தொலைப்பேசியில் அண்ணாமலைக்கு அழைத்து, டெல்லியில் ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கூறினாராம்.
அதற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்த நிலையில், முதலில் உடல் நிலையை நன்றாக கவனிச்சுக்கங்க அண்ணாமலை என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினாராம்.. இந்த தகவலை அண்ணாமலை தனது கட்சியினரிடம் கூறிவிட்டு, இதை தான் கூறக்காரணம், பிரதமர் மோடி எவ்வளவு பிசியான சூழ்நிலையிலும், கட்சி தொண்டர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளவர் என்பதை பாருங்கள்.இதுதான் பாஜகவின் பலம் என்று அண்ணாமலை கட்சியினரிடம் நெகிழ்ச்சியுடன் கூறினாராம்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications