பிரதமர் நரேந்திர மோடி வருகை.. சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதையொட்டி, ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். பிரதமர் காரில் செல்லும் நேப்பியர் பாலம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம், பிரதமர் இன்று இரவு தங்கும் ஆளுநர் மாளிகை, மாலையில் செல்லும் நேப்பியர் பாலம் முதல் நேரு ஸ்டேடியம் மற்றும் ஆளுநர் மாளிகை சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதேபோல் சென்னை முழுக்க பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இதனிடையே விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மேலும் நேரு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் அனைத்து தங்கும் விடுதிகளும் போலீசாரில் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையாக, ஒப்பந்த ஊழியர்கள் சென்னை விமான நிலைய ஓடுபாதைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, வழக்கமான ஊழியர்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்தில் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி, இன்று மாலை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தமிழக முக்கிய அரசியல் தலைவர்ளை பிரதமர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய இணையமைச்சல் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பிரதமர் மோடியை இன்று இரவு சந்திக்க வாய்பபு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications