பஸ்ஸில் வெளியூர் போறீங்களா.. டிக்கெட் கட்டணம் இவ்வளவா? அலற விடும் ஆம்னி பஸ்கள்.. விடுமுறைகள் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. இதுகுறித்த நடவடிக்கையும் தேவை என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், தங்களுடைய கல்வி மற்றும் வேலை நிமித்தமாக, குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகின்றனர்.

private omni bus tickets increased ticket fare for weekend and festival seasons

அதேபோல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றிக்கொண்டும், வேலையை தேடிக்கொண்டும் தலைநகருக்கு குடிபெயர்கின்றனர்.. இவர்கள் அனைவருமே பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.

சொந்த ஊர்: அப்படியான நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்பும்போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.. சமீபத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்னி பஸ் கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தப்பட்டது... அதன்படி நேரம், தூரம், பேருந்துகளின் தரம் அடிப்படையில் 10 முதல் 22 சதவீதம் வரை குறைக்க ஆம்னி பஸ் ஓனர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது பண்டிகைகள் துவங்கி உள்ளன.. கோடை விடுமுறையும் துவங்கிவிட்டது.. அதனால் சென்னை உட்பட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல துவங்கி உள்ளனர்.. இன்று ஏப்ரல் 14,தமிழ் புத்தாண்டு - வெள்ளி, சனி, ஞாயிறு என வரிசையாக 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது.. இதனால் வெளியூர் பயணங்களும் அதிகமாகி உள்ளது.. கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு பலமுறை எச்சரித்தும்கூட, விட்டது. ஆனால் அது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை..

குற்றச்சாட்டுகள்: ஆனால், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆம்னி பேருந்து டிக்கெட்டின் விலை தற்போது 1500 ரூபாயாக உயர்ந்துள்ளது என குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது... அதிலும் விடுமுறையை முன்னிட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.. அதனால், இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் விடுத்துள்ளனர்.

800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து டிக்கெட்டின் விலை தற்போது 1500 ரூபாயாக உயர்ந்துள்ளது என குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது... அதிலும் விடுமுறையை முன்னிட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.. அதனால், இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் விடுத்துள்ளனர். இதனிடையே, இடம் மாறும் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்ட் மாற போவதாக செய்திகள் வலம்வருகின்றன. அதாவது அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்து சேவையும் இடம் மாறுகிறது.

கிளாம்பாக்கம்: இதனை கருத்தில் கொண்டு பல்வகை போக்குவரத்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவையால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், வெளிவட்ட சாலை அருகே வரதராஜபுரம் பகுதியில் தனியார் பேருந்துகளுக்காக 29 கோடி ரூபாயில் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட நிறுத்துமிடம் தனியார் பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பொதுவாக பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். கூடுதலாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதே அதற்கு காரணமாக இருக்கும் என்கிறார்கள்.. எனவே, அநேகமாக ஜுன் மாதத்திற்கு பிறகு இந்த நிலைமை மாறும் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+