செங்கோட்டையனால் வந்த "ரிஸ்க்".. இப்போது மோதினால் சிக்கல்தான்.. ஒரு நொடி யோசித்த எடப்பாடி.. அடடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் உச்சம் அடைந்து உள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகளுக்காக பொறுப்புகளை அறிவித்தார். அதிமுகவில் நடக்கும் இந்த மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மொத்தமாக 82 கழக மாவட்டங்களுக்கு அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இதில் செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

Edappadi Palaniswami Sengottaiyan

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

பேட்டி

அதிமுகவில் நடக்கும் இந்த மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அதிமுகவில் தான் ஓரம்கட்டப்படுகிறோம் என்று செங்கோட்டையன் நினைக்கிறார். கட்சியில் மூத்தவராக இருக்கும் நமக்கு மதிப்பு இல்லை என்று
எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையனின் செயலை பார்க்கும் போது அவர் சண்டைக்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் செங்கோட்டையன் எடப்பாடிக்கு சமமானவர்.

ஆனால் இரண்டு தரப்பும் இன்னும் நேரடியாக மோதவில்லை. கட்சி இப்போதே பலவீனமாக
உள்ளது என்பதால் எடப்பாடி நேரடியாக மோத ரெடியாக இல்லை. அப்படி மோதினால் சிக்கல் ஏற்படும் என்று எடப்பாடி நினைக்கிறார். தேர்தலுக்கு சிக்கலாகும் என்று எடப்பாடி நினைக்கிறார். எடப்பாடி யாரையும் கேட்காமல் முடிவு செய்கிறார். அவர் தோல்வியை தழுவுகிறார் என்பதே சிக்கல்.

கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றே செங்கோட்டையனும் நினைக்கிறார்.
அவருக்கும் வயதாகிவிட்டது என்பதால்.. அவரும் பெரிதாக கலகம் செய்ய மாட்டார். இப்போது சண்டை போட்டால் சிக்கல் என்பதால்.. கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக செல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். ஆனால் இவர்கள் எல்லாம் இல்லாமல் கட்சி பலமின்றி உள்ளது. இதைத்தான் செங்கோட்டையன் மறைமுகமாக சொல்லி உள்ளார்.
கட்சியில் மற்றவர்களுக்கு மதிப்பு இல்லை.. ஜெயலலிதா, எம்ஜிஆருக்கே மதிப்பு இல்லை என்பதை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்.

வரப்போகிற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்வா சாவா தேர்தல் என்றுதான் நான் பார்க்கிறேன். இப்போது செங்கோட்டையனை எடப்பாடி சமாளித்தாலும் எதிர்காலத்தில் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்படும் என்று பிரியன் தெரிவித்துள்ளார்.


மோதல் பின்னணி

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி

பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+