"பெரியார் 100 ஆண்டு முன்பே பெண் உரிமைக்காக போராடினார்.." பிரியங்கா காந்தி இவ்ளோ அழகா தமிழ் பேசுறாரே
சென்னை: பெண் உரிமைக்காக நூற்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் என்றும், சமூக மாற்றத்துக்கான புரட்சி உருவான இடம் தமிழ்நாடு எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை நந்தனத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் பேசிய பிரியங்கா காந்தி தன்னுடைய உரைகளுக்கு இடையே தமிழில் பேசி அசத்தினார். "இந்திய பெண்களின் உரிமை பற்றி நான் பேசப் போகிறேன். நீங்களே என் தாய், என் சகோதரி. இங்கே இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்." என தமிழில் பேசிய அவர் பெண்களின் உரிமை தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்தியாவில் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள்.
பல தலைமுறைகளை தாண்டி நீடிக்கும் அடக்குமுறையிலிருந்து விடுபட பெண்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடி வருகிறீர்கள். எந்த நிலையில் இருந்தாலு இந்தியாவில் பெண்கள் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது." என்று தெரிவித்தார். சாதிய ஒடுக்குமுறைகள், பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிய சமூக நீதி தலைவர் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை பிரியங்கா காந்தி மேற்கொள் காட்டி உரையாற்றினார்.
"பெண் ஏன் அடிமையானாள் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து பல கட்டுரைகளை பெரியார் எழுதி உள்ளார். பெரியார் கேள்வி எழுப்பி நூறாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் பெண் அடிமைத்தனம் இன்றும் இருக்கிறது. அண்ணாவும், கலைஞரும் பெரியார் வழியில் பெண்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில்தான் சமூக மாற்றத்துக்கான புரட்சி உருவானது. சமத்துவத்தை முழுமையான நாம் பெற்றிட இன்னும் உழைத்திட வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்.
பெண்களுக்கான முக்கியத்துவத்தை அரசியலில் அதிகமாக்க வேண்டும். அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் சகிப்புத் தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்திட வேண்டும். பெண்கள் மனித குலத்திற்கே ஆதாரமாக விளங்குகின்றனர். பெண்கள் ஓன்று திரண்டால் எந்த சக்தியும் அதற்கு எதிராக நிற்காது. அன்பையும், போராடும் குணத்தையும் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்ததே பெண்கள் தான். பெண்கள் சமத்துவத்தை இன்னும் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. மாற்றத்திற்கான சரியான தளத்தில்தான் நாம் இங்கு நின்று கொண்டு உள்ளோம். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நாம் இங்கு திரண்டு உள்ளோம்." என்று அவர் பேசினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications