சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை.. ஜாமீனில் வந்த நெல்லை கண்ணன் கருத்து!

நேற்று இரவு கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆபரேஷன் பெயிலியர்..' எச்.ராஜாவை சீண்டிய சீமான்

    சென்னை: ஜாமீனில் வெளியே வந்துள்ள தமிழறிஞர் நெல்லை கண்ணன், நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து நெல்லை கண்ணன் முறையற்ற விஷயங்களை பேசினார். இவர்களின் கதையை தீர்க்க வேண்டும் என்பது போல அவர் மோசமாக பேசி இருந்தார்.

    Problem because of the people who didnt know the Thirunelveli slang says, Nellai Kannan

    இதற்கு பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக இணையத்திலும், களத்திலும் பாஜகவினர் போராட்டம் செய்து வந்தனர். இதையடுத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அதன்பின் நெல்லை மாவட்ட நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு 11 நாட்கள் காவல் அளித்து சிறையில் அடைத்தது.

    இதையடுத்து சிறையில் இருந்த நெல்லை கண்ணன் மூன்று நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் இவர் பிணையில் வெளியே வந்தார்.

    எதாவது பல்கலை.க்கு சென்று மாணவர்களை சந்தியுங்கள்.. தைரியம் இருக்கிறதா? மோடிக்கு ராகுல் சவால்! எதாவது பல்கலை.க்கு சென்று மாணவர்களை சந்தியுங்கள்.. தைரியம் இருக்கிறதா? மோடிக்கு ராகுல் சவால்!

    இன்று காவல் நிலையத்திற்கு கையளித்திட சென்ற நெல்லை கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் வரிசையாக நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் நெல்லை கண்ணன் எதற்கும் பதில் அளிக்கவில்லை.

    கடைசியாக நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என்று நெல்லை கண்ணன் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். முன்னதாக நெல்லை கண்ணன் பேசிய நெல்லை தமிழை தவறாக புரிந்து கொண்டு அவர் மீது புகார் அளித்துவிட்டதாக சிலர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Problem because of the people who didn't know the Thirunelveli slang says, Nellai Kannan about his arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X