Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவ ஆணைய அறிவிப்பு.. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல்.. முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

தேசிய மருத்துவ ஆணையம் மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்று முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு மருத்துவத்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற செயல் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Problem in starting new Medical Colleges in Tamil Nadu Chief Ministers letter to PM Modi

தென் மாநிலங்களில் தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறி முறைகளில் கூறப்பட்டுள்ள மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக தற்போது இருந்து வருகிறது. இந்த முடிவு 2024-25 கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்று கொள்கை முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் நவீன மருத்துவ வசதி அதிகமாக இருப்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ இடங்களை நிர்ணயிப்பது மக்களின் மருத்துவ தேவை பாதிக்கப்படும்.

அரசமைப்புச் சட்டத்தில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும் ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை தமிழகத்தின் மீது திணிப்பதன் மூலம் ஒன்றிய மோடி அரசு அரசமைப்புச் சட்டத்தை மீறுவதோடு, தமிழ்நாட்டில் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உடனடியாக திரும்பப்பெறுவதற்கு மாநில உரிமைகளுக்காக குரல்கொடுத்து போராடி வருகிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் முதலமைச்சர் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+