புயலை கிளப்பிய ரிப்போர்ட்.. 2019 தேர்தலில் பாஜக முறைகேடு செய்தது! அசோகா பல்கலை. பேராசிரியர் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றதாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் வெளியிட்டு இருக்கும் ஆய்வு கட்டுரை பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு உதவி பேராசிரியராக இருப்பவர் சப்யசாச்சி தாஸ், உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் ஜனநாயக பின்னடைவு என்ற பெயரில் 50 பக்க ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து இவர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

 Professor of Ashoka University said BJP was involved in malpractice in the 2019 election

தேர்தல் முடிவுகளில் கடும் போட்டி நிலவிய தொகுதிகள், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதிகளின் முடிவுகளை இவர் ஆராய்ந்து இருக்கிறார். அதன் முடிவில், பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் அதிகளவில் நடைபெற்று உள்ளது என அவர் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அக்கட்சி அதிகளவில் வெற்றிபெற்று உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். தேர்தல் பார்வையாளர்கள் கண்டிப்புடன் செயல்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல், இஸ்லாமியர்களின் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் பாஜக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தேர்தல் பார்வையாளர்களின் பலவீனமான கண்காணிப்பின் காரணமாக ஜனநாயகத்தின் வளர்ச்சி கவலையளிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இவரது இந்த ஆய்வறிக்கை தேசிய அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் எம்பி சசி தரூர் இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "இது மிகவும் கவலை தருகிறது. இதற்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் விரிவான பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ள ஆதாரங்கள் புறக்கணிப்பட வேண்டியவை அல்ல. வாக்கு எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் பாஜகவினர் இந்த ஆய்வு அறிக்கை மறுப்பு தெரிவித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

இதுகுறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் தூபே தெரிவிக்கையில், "சப்யசாதி தாஸின் ஆய்வுக்கட்டுரை பற்றி அசோகா பல்கலைக்கழகம் பதிலளிக்கவில்லை. இந்தியாவின் துடிப்பான தேர்தல் முறையை இழிவுபடுத்தும் முயற்சி இது. பாஜகவுடன் கொள்கை சார்ந்த விசயங்களில் முரண்படுவது நல்லதல்ல.

அரைவேக்காட்டுத் தனமான ஆராய்ச்சியின் மூலமாக இந்தியாவின் தேர்தல் முறையை எப்படி இழிவுபடுத்துகிறார்கள்? இந்த பல்கலைக்கழகம் எப்படி இதற்கெல்லாம் அனுமதி தருகிறது. அசோகா பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு முறையான பதிலை அளிக்க வேண்டும்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு விளக்கமளித்துள்ள அசோகா பல்கலைக்கழக இணை நிறுவனர்கள் சஞ்சீவ் பிக்சந்தானி மற்றும் ஆஷிஷ் தவான், "பேராசியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த மட்டுமே இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறோம். இது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. எங்கள் பல்கலைக்கழக இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கும் கல்வி நிறுவனத்துக்கும் சம்பந்தம் இல்லை. " என்று தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+