கஜா புயல்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவி
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாட்டிற்கே உணவு வழங்கிய தஞ்சை மண்டல மக்கள் இன்று தமக்கே உணவின்றி நிற்கும் அவலத்தைப் பார்க்கின்றோம். கஜா புயல் அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில், மிகப்பெரும் உதவிகளைச் செய்ய நம்மால் இயலாது என்றாலும், இயன்றதைச் செய்வோம், இடைவிடாது செய்வோம் என்னும் அடிப்படையில், எங்கள் பேரவையின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.
பேரவையின் உறுப்பினர்கள், அம்மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகத் தங்களால் இயன்ற தொகையினைக் கொடுத்தனர். அப்படித் திரண்ட 1,28,330 ரூபாயில், 171 அரிசி மூட்டைகள் வாங்கப்பட்டு, அவை, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
பேரவையின் துணைப் பொதுச் செயலாளர்கள் சிங்கராயர், சிற்பி செல்வராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் சந்தானம், புலவர் செல்லக் கலைவாணன், கவிஞர் புண்ணியமூர்த்தி, ஜெகன் ஆகிய அறுவரும் அரிசி மூட்டைகளைச் சட்டமன்ற உறுப்பினரிடம், 24.11.2018 காலை மன்னார்குடி சென்று ஒப்படைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications