Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து வாங்கினால் மட்டுமே முழு உரிமையாளராக முடியாது.. உடனே செய்ய வேண்டிய விஷயம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து வாங்குவது என்பது பலருடைய வாழ்நாள் கனவாகும்.. ஆனால், நிலம் அல்லது வீடு வாங்கி அதனை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துவிட்டாலே அந்த சொத்து முழுமையாக நமக்கு சொந்தமாகிவிட்டது என்று நாம் கருதுகிறோம்.. இது ஒரு தவறான புரிதல் என்று சட்ட வல்லுநர்களும் உச்ச நீதிமன்றமும் எச்சரிக்கின்றன.. இது குறித்த சட்ட விதிகள் மற்றும் சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை விரிவாக இங்கே காண்போம்..

இந்தியாவில் ஒரு சொத்தை வாங்கும்போது அதனை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது என்பது மிக முக்கியமான ஒரு நடைமுறையாகும்.. இந்திய பதிவு சட்டத்தின்படி, 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள எந்தவொரு அசையா சொத்தையும் மாற்றும்போதும் அதனை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பது விதியாகும்..

Property Registration Legal Ownership Property Law Real estate india Mutation of Property

சொத்து பத்திரம்

ஆனால், பத்திரப்பதிவு செய்துவிட்டாலே அந்த சொத்தின் முழுமையான உரிமையாளராக நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று நினைப்பது ஒரு தவறான புரிதலாகும்.. பத்திரப்பதிவு என்பது ஒரு சொத்தின் உரிமை கைமாறுகிறது என்பதற்கான ஒரு ஆவணம் மட்டுமே தவிர, அதுவே அந்தச் சொத்தின் இறுதி உரிமையை உங்களுக்கு வழங்கிவிடாது..

சொத்து வாங்கும்போது பத்திரப்பதிவை முடித்த பிறகு, அந்தப் பதிவின் அடிப்படையில் வருவாய்த் துறை ஆவணங்களில் உங்கள் பெயரை மாற்றுவது மிகவும் அவசியமாகும்..

பத்திரப்பதிவு போதுமா

இதனை சொத்து மாற்றம் அல்லது பட்டா மாறுதல் என்று அழைக்கிறோம்.. நீங்கள் பத்திரப்பதிவு மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டால், அரசுப் பதிவேடுகளில் இன்னும் பழைய உரிமையாளரின் பெயரே நீடிக்கும்..

இதன் காரணமாகவே, ஒரு சொத்தை இரண்டு முறை விற்பனை செய்வது அல்லது வாங்கிய சொத்தின் மீது பழைய உரிமையாளர் கடன் வாங்குவது போன்ற மோசடிகள் நடக்கின்றன.. எனவே, பதிவு செய்த கையோடு வருவாய்த் துறை ஆவணங்களில் முந்தைய உரிமையாளரின் பெயரை நீக்கிவிட்டு உங்கள் பெயரை சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்..

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில் ஒரு முக்கியமான கருத்தை பதிவு செய்துள்ளது.. அதாவது வெறும் பத்திரப்பதிவு ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் அந்தச் சொத்தின் முழுமையான சட்டபூர்வ உரிமையாளர் ஆகிவிட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது..

சொத்தின் முழு உரிமையாளர் யார்

பதிவு ஆவணங்கள் என்பது சொத்துரிமைக்கான ஒரு கூடுதல் ஆதாரமே தவிர, அது மட்டுமே முழுமையானது அல்ல.. ஒரு சொத்தின் மீது உங்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தச் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும்..

குறிப்பாக சொல்லப்போனால், விற்பனை ஒப்பந்த விவரங்கள், முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம், விற்பனையாளர் மற்றும் சாட்சிகளின் கையொப்பம் ஆகியவை மிக அவசியமானவை.. இவை தவிர, குறிப்பிட்ட அந்தச் சொத்தின் மீது எவ்விதமான வங்கிக் கடனோ அல்லது இதர வில்லங்கங்களோ இல்லை என்பதற்கான தடையில்லா சான்றிதழை பெறுவதும் முக்கியமாகும்..

மேலும், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீதுகள் மற்றும் உள்ளூர் அரசு அலுவலகத்தில் வழங்கப்படும் இறுதிச் சொத்துரிமைச் சான்றிதழ் ஆகியவை உங்களிடம் இருக்க வேண்டும்..

உச்ச நீதிமன்றம் விதிகள்

இந்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்போதுதான், ஒரு சொத்தின் உரிமை சட்டபூர்வமாக மற்றொருவருக்கு முழுமையாக மாற்றப்பட்டதாகக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது.. எனவே நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் வெறும் பதிவுடன் நின்றுவிடாமல், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறை நடைமுறைகளைச் சரியாக முடிப்பதே பாதுகாப்பானது..

ஆகவே, பத்திரப்பதிவு என்பது சொத்து பரிமாற்றத்திற்கான ஒரு ஆவணம் மட்டுமே தவிர, அதுவே அந்தச் சொத்தின் இறுதி உரிமையை உறுதி செய்துவிடாது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+