தமிழ்நாட்டில் சொத்து விற்பனை.. வேறு ரிஜிஸ்டர் ஆபிஸில் பத்திரம் பதிய வழிமுறைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து விற்பனை பத்திரங்களை வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிய முடியும். அதற்கான வழிமுறை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

ஒருவர் 100 ரூபாய்க்கு மேல் வாங்கும் எந்த சொத்தையும் கண்டிப்பாக பத்திரம் பதிய வேண்டும். 1908ம் ஆண்டு நிலப்பதிவு சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதாவது அசையாத சொத்தை வாங்குவதோ விற்பதோ கண்டிப்பாக சொத்துப்பதிவு அவசியம் ஆகும். ஏனெனில் சொத்துப்பதிவு செய்யாவிட்டால் அவர் உரிமையாளராக முடியாது. கோர்ட்டுக்கு கூட போக முடியாது. எனவே தான் சொத்தினை பத்திரப்பதிவு செய்து அவசியம்ஆகும்.

Property sale deeds can be registered at other sub-registrar offices in tamilnadu

சொத்தினை பத்திரப்பதிவு செய்ய வாங்குபவர் மற்றும் விற்பவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். இருவரின் ஆதார் எண், அடையாள சான்றுகள், சொத்து பகிர்வு நகர். அங்கீகாரம் பெற்ற நபர் சொத்துப்பதிவு அட்டை நகல், நகராட்சி வரி மசோதா, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ், சரிபார்க்கப்பட்ட விற்பனை பத்திர நகல், கட்டுமானம் முடித்ததற்கான சான்றிதழ், முத்திரை தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீத ஆகியவை அவசியம்.

மேற்கண்ட ஆவணங்களுடன் சொத்து அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை சொத்து விற்பனை பத்திரங்களை வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிய வேண்டும் என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன.

புதிய சட்டப்படி சென்னை உள்பட தேசிய அளவில் நான்கு நகரங்களில் தலா ஒரு பத்திரப்பதிவு அலுவலகங்களில் அப்படி பத்திரம் பதிய முடியும். அந்த பத்திரப்பதிவு அலுவலகம் மட்டுமே சிறப்பு தகுதி பெற்றவை ஆகும். வட சென்னை பதிவு மாவட்டத்தில் முதலாவது சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டள்ளது. இதுதவிர மற்ற இடங்களில் வேறு இடத்து சொத்துக்களையும் சேர்த்து பதிவு செய்ய முடியும்.

Property sale deeds can be registered at other sub-registrar offices in tamilnadu

உதாரணத்திற்கு சென்னையில் சில சொத்துக்களையும், மதுரையில் ஒரு சொத்தையும் வாங்குகிறார் என்றால், அந்த இரண்டு சொத்தையும் சேர்த்தே சென்னையிலேயே பத்திரம் பதிய முடியும். அதேநேரம் நிலம் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்து முறையாக அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே பத்திரம் பதிவார். ஆனால் பதிந்த பத்திரத்தை உடனே வாங்க முடியாது.

முதலில் சென்னை சார்பதிவாளர் அந்த சொத்து நகலை மதுரை சார்பதிவாளருக்கு அனுப்பி வைப்பார். இதையடுத்து குறிப்பிட்டுள்ள சொத்தின் உண்மை நிலவரத்தை மதுரை சார்பதிவாளர் உறுதி செய்வார். அப்படி உறுதி செய்த பின்னரே சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து பத்திரத்தை பெற முடியும். இப்படியான சூழல் இருந்தால் இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தெளிவாக தகவல் தெரிவித்து பதிய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+