சொத்துக்கள் விற்பனை பத்திரம், நில ஆவணங்கள்.. ரூ-80 லட்சம் வீட்டு மனை? மக்களுக்கு தமிழக அரசு அறிவுரை
சென்னை: சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள், விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது
தமிழகத்தை பொறுத்தவரை, சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, போலி பத்திரங்களை தயார் செய்து, அச்சுஅசல் நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன.. அதனால்தான், இதுபோன்ற மோசடிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் தமிழக பதிவுத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போலி ஆவணங்கள் வைத்து மோசடி செய்வோர்கள் மீது, கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.. இதில் லஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து வருகிறது.
அதேபோல, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, கள ஆய்வுகளையும் மேற்கொள்கிறது.. இதன்ஒரு பகுதியாக, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இவ்வளவு கடிவாளங்களை தமிழக அரசு போட்டும்கூட, மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நேற்றைய தினமும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 4 நபர்கள் கைதாகியிருக்கிறார்கள். இதுகுறித்த விவரத்தை காவல்துறை செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
வீட்டுவசதி வாரியம்: இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் சி.பிரசாத் என்பவர் முகப்பேர் மேற்கு திட்டத்தில் குறைந்த வருவாய் பிரிவு-1, மனை எண்.7/861-ல் உள்ள சொத்தை பொய்யான ஆவணங்கள் தயார் செய்து எதிரிகள் அபகரித்ததாக கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு LFIW பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், உத்தரவுப்படி மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகாவின் மேற்பார்வையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட துரை பாண்டியன், ஜெகதீசன், தனலட்சுமி மற்றும் நவீன் ராஜ் ஆகியோரை கைது செய்து ஜனவரி 29ம் தேதி அன்று நீதித்துறை நடுவர், சிசிபி மற்றும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆவணங்கள்: சென்னை மாநகரில், சொத்துக்கள் வாங்கும் நபர்கள் விற்பனை செய்யப்படும் நிலத்தின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து சொத்துக்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது" என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications