சொத்து வரி உயர்த்தாவிட்டால் மானியம் கட்! மத்திய அரசின் உத்தரவால் வேறு வழி தெரியவில்லை: கே.என்.நேரு
சென்னை: தமிழகத்தில் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம். மார்ச் 31ம் தேதிக்குள் சொத்து வரியை உயர்த்தாவிட்டால் இந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய நிதி விடுவிக்கப்படாது என மத்திய அரசின் 15வது நிதிக்குழு கட்டளையிட்டதால் தான் விருப்பமின்றி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது''என அமைச்சர் கே என் நேரு கூறினார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரிகளை மாநில அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் சொத்துவரி உயர்வு ஏன் என்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

24 ஆண்டுகளுக்கு பிறகு
உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியை பெற வேண்டும். இதற்கு 2021-2022ம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய கூறியது. இதனால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 24 ஆண்டுகளுக்கு பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

வரி வருவாய் குறைவு
சொத்து வரி உயர்வானது பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை காரணங்களாக கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானா உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வருவாய் குறைந்துள்ளது. செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக சென்னை மாநகராட்சியில் 2010-11ல் சொத்து வருவாய் 60 சதவீதமாக இருந்தது. இது 2015-16ல் 51 சதவீதமாகவும், 2020-21ல் 43 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சொத்து வரி உயர்வானது பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை காரணங்களாக கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வருவாய் குறைந்துள்ளது. செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக சென்னை மாநகராட்சியில் 2010-11ல் சொத்து வருவாய் 60 சதவீதமாக இருந்தது. இது 2015-16ல் 51 சதவீதமாகவும், 2020-21ல் 43 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கவனமான முடிவு
இந்தியாவில் அதிக நகர்புற பகுதிகள் தமிழகத்தில் தான் உள்ளது. நகர்புறங்களில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், புதிய மேம்பாலம், நவீன பள்ளிகூடம், பூங்கா அமைக்க உள்ளாட்சி அமைப்புக்களுக்கு வருவாய் தேவையாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை,எளிய நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்காத வகையில் மிகவும் கவனமாக முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தியாவில் அதிக நகர்ப்புற பகுதிகள் தமிழகத்தில் தான் உள்ளது. நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், புதிய மேம்பாலம், நவீன பள்ளிகூடம், பூங்கா அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் தேவையாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை,எளிய நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்காத வகையில் மிகவும் கவனமாக முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பிற மாநிலங்களில் அதிகம்
சென்னை மாநகராட்சியில் 600 சதுரஅடி பரப்பு கொண்ட குடியிருப்பு, கட்டடத்துக்கு அதிகப்பட்ச சொத்து வரி ரூ.3240, சீராய்வுக்கு பிறகு ரூ.4860 ஆக உயரும். இதே பரப்பளவு கொண்ட கட்டடத்துக்கு பெங்களூருவில் ரூ.8660, கொல்கத்தாவில் ரூ.15,984, புனேவில் ரூ.17,312, மும்பையில் ரூ.84,584 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 600 சதுரஅடி கட்டடத்துக்கு தற்போது குறைந்தபட்ச சொத்து வரி ரூ204ம், சீராய்வுக்கு பிறகு ரூ.255 ஆகவும் உயரும். இது லக்னோவில் ரூ.648 ஆகவும், இந்துரில் ரூ.1,324, அமதாபாத்தில் ரூ.2,103 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது கோவையில் 600 சதுரஅடி கட்டடத்துக்கு அதிகபட்ச சொத்துவரி ரூ.972 ஆகவும், சீராய்வுக்கு பின் ரூ.1215 ஆக உயரும். இது லக்னோவில் 2360 ஆக உள்ளது. நம்மை விட பிற மாநிலங்களில் வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 600 சதுரஅடி பரப்பு கொண்ட குடியிருப்பு, கட்டடத்துக்கு அதிகப்பட்ச சொத்து வரி ரூ.3240, சீராய்வுக்கு பிறகு ரூ.4860 ஆக உயரும். இதே பரப்பளவு கொண்ட கட்டடத்துக்கு பெங்களூருவில் ரூ.8660, கொல்கத்தாவில் ரூ.15,984, புனேவில் ரூ.17,312, மும்பையில் ரூ.84,584 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 600 சதுரஅடி கட்டடத்துக்கு தற்போது குறைந்தபட்ச சொத்து வரி ரூ204ம், சீராய்வுக்கு பிறகு ரூ.255 ஆகவும் உயரும். இது லக்னோவில் ரூ.648 ஆகவும், இந்துரில் ரூ.1,324, அமதாபாத்தில் ரூ.2,103 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது கோவையில் 600 சதுரஅடி கட்டடத்துக்கு அதிகபட்ச சொத்துவரி ரூ.972 ஆகவும், சீராய்வுக்கு பின் ரூ.1215 ஆக உயரும். இது லக்னோவில் 2360 ஆக உள்ளது. நம்மை விட பிற மாநிலங்களில் வரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் கட்டளை
சொத்து வரி உயர்வை நாங்கள் விரும்பவில்லை. மத்திய அரசின் 15வது நிதிக்குழு கட்டளையால் தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் சொத்து வரி குறைவாக தான் உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications