Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சுழலும் வேட்டை".. திடீர்னு லாட்ஜில் நுழைந்த போலீஸ்.. 3 அப்பாவி பெண்கள் மீட்பு.. சபாஷ் காக்கிசட்டை

சென்னை எழும்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை லாட்ஜில் போலீசார் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.. அப்போதுதான், 3 இளம்பெண்களை பத்திரமாக மீட்டு, காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.. என்ன நடந்தது எழும்பூரில்?

நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லியும், சினிமாவில் சான்ஸ் தருவதாக சொல்லியும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களை அடிக்கடி அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இந்த பெண்கள் பெரும்பாலும் படித்த பட்டதாரிகள் ஆவர்.. தங்கள் குடும்ப சூழல் கருதி, உயிருக்கு பயந்து கொண்டு, சென்னையில் விபச்சார கும்பல்களிடம் சிக்கி கொண்டுள்ளனர்.

ரிசார்ட்ஸ்

ரிசார்ட்ஸ்

அதனால்தான், பெருகிவரும் இந்த விபச்சாரத்தை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்... அத்துடன், விபச்சாரம் நடக்கும் இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு, அங்கு சிக்கி உள்ள பெண்களை பத்திரமாக மீட்டும் வருகிறார்கள்.. மேலும், கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். எனவே போலீசார், தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்ஜூகள், ரிசார்ட்கள், ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தி, பாலியல் புரோக்கர்களை கைது செய்து சிறையில் தள்ளியும் வருகிறார்கள்.

லாட்ஜ்

லாட்ஜ்

அந்தவகையில்தான், சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதனால், விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட லாட்ஜூக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான், அங்கிருந்த ரூம்களை, பிரகாஷ் என்பவர் மொத்தமாக வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்தது.. இவர்தான் இந்த கும்பலின் தலைவனும் ஆவார்.. இதையடுத்து, அங்கிருந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான், ஜெயப்பிரதா என்ற பெண்ணின் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகமாக விழுந்தது.

ஜெயப்பிரதா

ஜெயப்பிரதா

ஜெயப்பிரதாவுக்கு 19 வயதுதான் ஆகிறது.. புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்.. இவர் பிரகாஷின் காதலியும்கூட.. தன்னுடைய காதலியையும், இந்த பாலியல் தொழிலில் பிரகாஷ் ஈடுபடுத்தியதும், அந்த ஜெயப்பிரதா உடன்பட்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெயப்பிரதாவுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.. பிரகாஷ் என்பவருடன் எப்படியோ அறிமுகம் ஏற்பட்டுள்ளது.. அதற்கு பிறகு பிரகாஷ் + ஜெயப்பிரதாவும் காதலித்துள்ளனர்.. ஒருகட்டத்தில், காதலன் பிரகாஷ் சென்னையில் இருப்பதை அறிந்ததும், அவரை நம்பி சென்னைக்கு வந்துள்ளார்..

 G PAY

G PAY

பிறகுதான், தன்னுடைய காதலன் பிரகாஷ் பாலியல் தொழில் செய்வது ஜெயப்பிரதாவுக்கு தெரியவந்தது.. சொந்த ஊரை விட்டு வந்துவிட்டதால், திரும்பி செல்ல வழியுமின்றி, காதலன் பிரகாஷையும் நம்பி, இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம்.. ஆனால், லாட்ஜூக்குள் போலீசாரை பார்த்ததுமே அதிர்ந்து போனாராம் ஜெயப்பிரதா.. போலீசில் பிடிபட்டதும், தனக்கு ஒன்றும் தெரியாது. நான் சாப்பாடு கொடுக்க வந்தேன் என்று சொல்லி சமாளித்தாராம்.. ஆனாலும், போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதுடன், அவரது செல்போனையும் வாங்கி ஆய்வு செய்துள்ளனர்.. அப்போது G-pay மூலம் நிறைய பேர், ஜெயப்பிரதாவுக்கு பணம் செலுத்தி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்..

ஜெயப்பிரதா

ஜெயப்பிரதா

அதற்கு பிறகுதான் மொத்த உண்மையையும் ஜெயப்பிரதா சொல்லி உள்ளார்.. இதையடுத்து ஜெயபிரதாவை போலீசார் கைது செய்தனர்... அதேபோல, விபசார தொழிலுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்தாஸ் என்ற இளைஞரும் கைதானார். ஆனால் முக்கிய குற்றவாளியான பிரகாஷை காணவில்லை.. எங்கேயோ தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்... அவரை போலீசார் தற்போது தேடி வருகிறார்கள்.. இதே லாட்ஜில் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்... அந்த பெண்களுக்கும் 19 வயதுதான் ஆகிறதாம்.. அதேபோல, பெங்களூரில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக அழகி ஒருவரையும் பிரகாஷ் வரவழைத்துள்ளார்..

 வேட்டை ஆரம்பம்

வேட்டை ஆரம்பம்

இவரைப்போலவே, மகாராஷ்டிராவில் இருந்தும் ஒரு அழகி வந்துள்ளார்.. இவர்கள் அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்... இதில், பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் தர்மபுரியை சேர்ந்தவர்.. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் போலீஸ் பிடியில் சிக்கி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்... அதன்பிறகு, காப்பகத்தில் இருந்து அவருடைய வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.. ஆனால், அவர் இப்போது மறுபடியும் இதே பாலியல் புரோக்கரிடம் சிக்கி, விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதையடுத்து, சென்னை மாநகர் முழுவதும் விபச்சார கும்பலை பிடிக்க அதிரடி வேட்டையை தொடர வேண்டும் என்று கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளாராம்.. போலீசாரும் சாட்டையை சுழல விட்டுள்ளனர்.!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+