சென்னை வில்லிவாக்கம் வாடகை வீட்டில் வில்லங்கமான சமாச்சாரம்.. கையும் களவுமாக சிக்கிய ரேவதி
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தி 2 பெண்களை மீட்டனர். விபச்சாரத் தொழில் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் விபச்சார கும்பல்கள் போலீசுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் ரகசியமாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படி செயல்பட்டு வரும் விபச்சார கும்பல்களை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கண்டுபிடிக்கிறார்கள்.

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்களை கண்டுபிடிப்பதற்கு என்றே காவல்துறையில் தனிப்படை உள்ளது. அவர்கள் அடிக்கடி இது தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சந்தேகத்திற்கு இடமான வீடுகள், மசாஜ் சென்டர்கள், ஸ்பா உடன் கூடிய அழகு நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டம் விடுவார்கள். ரகசிய தகவல் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தேடிபிடித்து புரோக்கர்களை கைது செய்வார்கள்.. அவர்கள் வசம் உள்ள பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்., இதுதான் அடிக்கடி நடக்கும் விஷயமாக உள்ளது. என்ன தான் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலும், சென்னையில் வேறு பாணியில் விபச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படித்தான் வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் நடந்திருக்கிறது.
சென்னை வில்லிவாக்கம் சீயாலன் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடைபெறுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஒரு கட்டத்தில் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டை தீவிரமாக மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். ரகசியமாக வந்த தகவல்கள் உண்மை என்பதை உறுதி செய்த போலீசார், அங்கு விபச்சாரம் நடப்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து வில்லிவாக்கம் சீயாலன் 2-வது தெருவில் விபச்சாரம் நடந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த 2 பெண்களை போலீசார் அதிரடியாக மீட்டனர். விபச்சாரத் தொழில் நடத்தி வந்த பட்டாளம் எத்திராஜ் கார்டன் தெருவை சேர்ந்த 35 வயதாகும் ரேவதி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் , வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து கைது செய்யப்பட்ட புரோக்கர் ரேவதி விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications