"மசாஜ் சென்டர்".. மாஜிக்கள் யார்.. ஆக்ஷனில் போலீஸ்.. விபச்சாரத்தில் சிக்கிய ஐஸ்வர்யா..நாமக்கல் ஷாக்
ஆன்லைனில் விபச்சாரம் நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: விபச்சாரம் செய்வதற்காகவே தனியாக ரூம் எடுத்து, காசு பார்த்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. அந்த பெண் பெயர் ஐஸ்வர்யா.
தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..
அதன்படி, போலீசாரும் தங்கள் அதிரடிகளை அனைத்து பக்கமும் காட்டி வருகின்றனர்.. எண்ணற்ற ரவுடிகள் கைதாகியும் வருகின்றனர். பாலியல் சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்பா & மசாஜ் சென்டர்
அதேபோல, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.. சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பலமுறை புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

மசாஜ் சென்டர்
இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையையும் போலீசாரும் அளித்திருந்தனர். அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாம்.

மாஜிக்கள்
இதையடுத்துதான், 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து, அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் தனிப்படையினர் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த பல இளம் பெண்களையும் போலீசார் மீட்டனர்... இதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அப்போது கசிந்தது.. இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்..

மசாஜ் சென்டர்கள்
இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு சில கருப்பு ஆடுகள் மறைமுகமாக உதவியாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது... இது தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில், நாமக்கல்லில் நடந்து வரும், ஆன்லைன் விபச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வாலரை கேட் பகுதியில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதாக திருச்செங்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தனி ரூம்
இதனையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைக்க முடிவு செய்தனர்... அதன்படி, வாலரை கேட் அருகே உள்ள ரத்தினா டவரில் உள்ள 3வது மாடியில், மசாஜ் பார்லர் நடத்துவதாகவே ஒரு ரூம் எடுக்கப்பட்டுள்ளதும், அந்த ரூமில் விபச்சாரம் நடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.. இதனையடுத்து, யூனிபார்ம் இல்லாமல், திடீரென கஸ்டமர் போல் உள்ளே சென்றனர் போலீசார்.. அங்கே நைசாக பேச்சு கொடுத்தனர்.. அப்போதுதான், 3 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் அங்கு இருந்ததை கண்டனர்..

விபச்சாரம்
இதையடுத்து திடீரென, தங்கள் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 40 வயதுடைய சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண், ஆன்லைன் மூலம் விபச்சார தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், லோகாண்டோ என்ற வெப்சைட் மூலம் இப்படி ஒரு விபச்சாரத்தை செய்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபட்ட மற்ற 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. ஐஸ்வர்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பிறகு ஜெயிலில் அடைத்தனர்...












Click it and Unblock the Notifications