சென்னை வடபழனி அடுக்குமாடியில் குவிந்த ஆண்கள்.. பகலில் 'ஆ'பிஸ்.. இரவில் குடும்பம்.. சிக்கியது எப்படி
சென்னை: வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் அப்பட்டமாக ஆபிஸ் வைத்து விபச்சாரம் செய்த பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பகலில் பாலியல் தொழில் செய்தும், இரவில் குடும்பம் நடத்தியும் வந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வயிற்று பிழைப்புக்காக இப்படி செய்து வருவதாகவும், இதனை விடமுடியாது என்றும் கூறி அதிரவைத்துள்ளார்.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சில ஸ்பாக்களில் அவ்வப்போது விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்து போலீசார் அவர்களை கைது செய்கிறார்கள். திடீர் திடிரென நடைபெறும் சோதனையில் புரோக்கர்கள் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள், ஸ்பா நடத்தும் சிலர், மற்றும் விபச்சாரத்தில் தள்ளும் பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னதான் கைது நடவடிக்கைகள் எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுவோரை காப்பகத்தில் ஒப்படைத்தாலும், வெளியே வந்த பின்னர் மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதற்கு புரோக்கர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 61 வயதாகும் பஷீர் முகமது இப்ராகிம் என்பவர் அடிக்கடி விபச்சார வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் ஆவார்.இவர் இதுவரை 2 முறை கைதாகி சிறைக்கு சென்று திரும்பியுள்ளார்.
அப்படித்தான் அண்மையில் சிறை சென்று திரும்பிய பஷீர் முகமது இப்ராகிம் சென்னை வடபழனியில் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரத் தொழிலை அலுவலகம் போல் நடத்தி வெளிப்படையாக செய்து வந்துள்ளார்.இதுபற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே, அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார், பஷீர் முகமது இப்ராகிம் நடத்தி வரும் விபச்சார தொழில் அலுவலகத்தில் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் அங்கு 45 வயது பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விசாரித்த போது, பகலில் விபசாரம் நடக்குமாம். காலை 10 மணிக்கு அலுவலகத்தை திறந்து மாலை 6 மணிக்கு மூடிவிட்டு போவார்களாம். அலுவலகத்தில் தேவி (40) என்பவர் பணியாற்றி வந்தார். பஷீர் முகமது இப்ராகிமோடு, தேவியும் கைது செய்யப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்ட 45 வயது பெண்ணும் மீட்கப்பட்டார்.
விபச்சார தொழிலை நடத்தும் 3 பேருக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். பகலில் வந்து விபசாரத் தொழிலை நடத்திவிட்டு, பின்னர் இரவில் அவர்களுடைய வீட்டிற்கு வழக்கம் போல் போய்விடுவார்களாம். தினமும் 3 முதல் 5 வாடிக்கையாளர்கள் வரை உல்லாசத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.1,500 வீதம், ரூ.7,500 வரை வருமானம் பார்த்து வந்தார்களாம். அடுக்குமாடி குடியிருப்புக்கான மாத வாடகைக்கு ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, மீதி பணத்தை இவர்கள் 3 பேரும் பங்கு போட்டு வாழ்ந்து வந்தார்களாம்.
போலீசிடம் சிக்கிய பெண் கூறும் போது, இந்த தொழில் எங்களுக்கு வயிற்றுப் பிழைப்பு, இதை கைவிட முடியாது என்று கூறினாராம். அவரை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. கைதான புரோக்கர் பஷீர் முகமது இப்ராகிம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தேவி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications