1234, 1111, 0000, 4321..இது தானே உங்க ATM PIN நம்பர்! ஈசியா கண்டுபிடிச்சிரலாம்! நிபுணர்கள் வார்னிங்!
சென்னை: டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது பின் நம்பர்களை (PIN Number) எளிதில் ஹேக் செய்து பணத்தை திருடி வருகின்றனர் ஹேக்கர்கள். இந்த நிலையில் 1234, 1111, 0000, 2222, 4321 போன்ற எளிதான எண்களை பின் நம்பர்களாக பயன்படுத்தக் கூடாது எனவும், இவை எளிதில் ஹேக்கர்களின் இலக்காக உள்ளதாக எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பணத்தை கையில் வைத்து செலவழிப்பது குறைந்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தான் பெரும்பாலான மக்களின் நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்ற அனைத்திற்கும் இப்போது கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய சூழலில், நமது வங்கி கணக்கை பாதுகாக்க மிக முக்கியமானது நான்கு இலக்க பின் எண் (PIN Number) ஆகும். சிறியதாகத் தோன்றும் இந்த எண், உங்கள் வங்கி கணக்கின் பாதுகாப்பிற்கான முதல் சாவியாக இருக்கிறது.

PIN பாதுகாப்பு
ஆனால் பலரும் இதை அசட்டையாக எடுத்துக் கொண்டு, யாரும் எளிதில் யூகிக்கக்கூடிய எண்களை PIN ஆக பயன்படுத்தி தங்களே சைபர் மோசடிகளுக்கு இலக்காகின்றனர். சைபர் நிபுணர்கள் கூற்றுப்படி, ஹேக்கர்கள் சில விநாடிகளில் நமது PIN எண்ணை கண்டுபிடித்து வங்கி கணக்கை காலி செய்து விட முடியும். காரணம், பெரும்பாலான மக்கள் சுலபமாக நினைவில் வைக்கக்கூடிய எண்களை தேர்வு செய்கிறார்கள். உதாரணமாக, 1234, 1111, 0000, 2222, 4321 போன்ற தொடர்ச்சியான அல்லது ஒரே இலக்கங்கள் கொண்ட எண்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
எளிய பின்னை தவிர்த்தல்
இத்தகைய எண்கள் ஹேக்கர்களுக்கு மிகவும் எளிதான இலக்காக அமைகின்றன. இதன் கூடுதல் ஆபத்தாக, பிறந்த தேதி அல்லது பிறந்த ஆண்டு ஆகியவற்றை PIN எண்ணாகப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. 1308 (ஆகஸ்ட் 13) அல்லது 1995, 2000 போன்ற எண்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஆவணங்களில் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் ஹேக்கர்களால் எளிதில் யூகிக்கப்படலாம். அதேபோல், மொபைல் எண், வாகன பதிவு எண், ஆதார் எண் போன்றவற்றின் பகுதிகளை PIN ஆக பயன்படுத்துவதும் மிகப்பெரிய தவறு.
டெபிட் கார்டு பாதுகாப்பு
பாதுகாப்பான PIN எண் என்பது எளிதில் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அதை நினைவில் வைத்துக்கொள்ள சிரமமாக இருக்கக்கூடாது. அதற்காக, சீரற்ற (Random) எண்களைத் தேர்வு செய்வது நல்லது. உதாரணமாக, 4892, 3927, 5803 போன்ற எண்கள் யாராலும் எளிதில் யூகிக்க முடியாதவை. இதன் மூலம் ஹேக்கர்களுக்கு தடையாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கார்டுக்கும் வெவ்வேறு PIN எண்களை வைப்பது பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். ஒரே PIN எண்ணை பல கார்டுகளிலும் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியது.
பரிவர்த்தனை எச்சரிக்கை
சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சொல்வதன் படி, ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை PIN எண்ணை மாற்றுவது அவசியம். ஏனெனில், நீண்டகாலமாக ஒரே எண்ணை வைத்திருப்பது, அதை கண்டறிய ஹேக்கர்களுக்கு வாய்ப்பளிக்கும். மேலும், உங்கள் PIN எண்ணை யாருடனும் பகிர வேண்டாம். எந்தவொரு வங்கியும், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்கள் PIN எண்ணை கேட்காது. யாராவது கேட்டால், அது உறுதியான மோசடி என்று எண்ணி உடனே கவனமாக இருங்கள். PIN எண்ணை எங்கும் எழுதிப் பதிவு செய்ய வேண்டாம். குறிப்பாக, கார்டின் பின்புறத்தில் PIN எண்ணை எழுதுவது மிகவும் ஆபத்தானது.
வங்கி மோசடி தடுப்பு
ஏடிஎம் பயன்படுத்தும் போது சுற்றுப்புறத்தை கவனமாகப் பார்ப்பதும் அவசியம். சிலர் கார்டு ஸ்கிம்மிங் சாதனங்களை அமைத்து PIN எண்ணை திருடும் வழக்குகள் அதிகரித்துள்ளன. கீபேட் மேல் கூடுதல் பிளாஸ்டிக் அல்லது கேமரா இருப்பதைப் பார்த்தால் உடனே பயன்பாட்டை நிறுத்துங்கள். மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் SMS அல்லது மின்னஞ்சல் எச்சரிக்கையை (alert) ஆனில் வைத்திருப்பது முக்கியம். இதன் மூலம் எந்தவொரு சந்தேகமான பரிவர்த்தனையும் உடனே கவனிக்க முடியும்.
பாதுகாப்பான PIN தேர்வு
மொத்தத்தில், நமது வங்கி கணக்கை பாதுகாப்பது நமது கையில் தான் உள்ளது. சுலபமான எண்ணைத் தேர்ந்தெடுப்பது வசதியாக இருக்கலாம், ஆனால் அதனால் உங்கள் கணக்கிலிருந்த பணம் ஒரு நொடியில் மாயமாகும் அபாயம் உண்டு. எனவே, சிறிதளவு கவனம், சிறிய முன்னெச்சரிக்கை ஆகியவையே அதுவே கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதம் ஆகும். பாதுகாப்பான PIN எண்ணைத் தேர்வு செய்து, அவ்வப்போது மாற்றி, எந்தவிதத் தகவலையும் பகிராமல் இருப்பதே உங்கள் பணத்தின் பாதுகாப்பிற்கான முதல் படி.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications