Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bison: பைசனில் ஜாதிய மோதலை தூண்டும் காட்சி! மாரி செல்வராஜை கைது செய்க! ஹரி நாடார் கட்சி போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பைசன்' திரைப்படத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாக கூறி இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யக் கோரி ஹரி நாடாரின் "சத்திரிய சான்றோர் படை" என்ற அரசியல் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தினர்.

சுமார் 5 அல்லது 6 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்த அந்த கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ் நாடார் பேசுகையில், "இயக்குநர் மாரி செல்வராஜ், தொடர்ந்து ஜாதி மோதலை தூண்டும் விதமாகவும் தென் மாவட்டங்களில் அமைதியாக இருக்கும் ஊர்களில் கலவரத்தை உண்டு செய்யும் விதமாகவும் பைசன் எனும் படத்தை இயக்கியிருக்கிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டும்" என அந்த நபர் கேட்டுக் கொண்டார்.

bison mari selvaraj hari nadar

நேற்றைய தினம் "பைசன் என்கிற காளமாடன்" என்ற திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் மகன் துருவ், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் துருவின் திரை வாழ்க்கையையே திருப்பி போடும் படமாக அமையும். கடந்த 1990ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளியையொட்டி விக்ரமின் முதல் படமான "என் காதல் கண்மணி" வெளியானது. அது போல் இந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பைசன் வெளியாகியுள்ளது.

இது நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படம் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்க, பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இது வலுவான கதை, சமூக அரசியல் பேச்சு, தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், கபடி மற்றும் காதல் காட்சிகள் என அனைத்தும் நிறைந்திருக்கிறது. சிறு வயது முதலே கபடி விளையாட ஆசைப்படும் துருவ். அதற்கு தடை போடும் அவரது அப்பா என்று கதை நகர்கிறது.

கபடி மீது ஆர்வமாக இருக்கும் தென் மாவட்டத்து இளைஞர் கதாபாத்திரத்தில் துருவ் நடித்திருக்கிறார். ஜாதி பிரச்சினைகள், கலவரம், வன்முறை, ஜாதி தலைவர்கள் கொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியில் ஜப்பானில் நடக்கும் இந்தியா- பாகிஸ்தான் மோதும் கபடி போட்டியில் துருவ், தடைகளை தாண்டி இந்திய அணிக்காக எப்படி விளையாட வந்தார். அந்த போட்டியில் அவர் வெற்றி கண்டாரா என்பதுதான் கதை.

இந்த படத்தில் குறிப்பிட்ட பிரிவினர் குறித்து அவதூறாக படம் எடுக்கப்பட்டதாக கூறி சத்திரிய சான்றோர் படை ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த கட்சியின் தலைவர் ஹரிநாடார். இவரது கட்சியினர்தான் ஆலங்குளத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

தற்போது ஆலங்குளம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக மனோஜ் பாண்டியன் உள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது ஓ பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார். கடந்த முறை மனோஜ் பாண்டியன் 74,153 ஓட்டுகள் பெற்று திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடித்தார். பூங்கோதை 70,614 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3,539 ஓட்டுகள் வித்தியாசத்தில் பூங்கோதை, மனோஜ் பாண்டியனிடம் தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு முக்கிய காரணம் ஹரி நாடார் தான். ஏனென்றால் அந்த தேர்தலில் ஹரி நாடார் 3ம் இடம் பிடித்தார்.

ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஹரி நாடார் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டு 37,727 ஓட்டுகள் பெற்றார். ஆலங்குளத்தில் வேட்பாளர்களின் வெற்றியை நாடார் சமுதாய ஓட்டுகள் தான் நிர்ணயம் செய்யும். மனோஜ் பாண்டியன், பூங்கோதை, ஹரி நாடார் ஆகியோர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில், ஹரி நாடார் ஓட்டுகளை பிரித்ததால் பூங்கோதை தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் ஹரி நாடார் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. கடந்த முறை ராக்கெட் ராஜா, ஹரி நாடாருடன் இருந்தார். ஆனால் இந்த முறை அவர் இல்லாததால் ஹரி நாடார் கணிசமான வாக்குகளை அள்ளுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+