இது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்

மதுரவாயல் திருடனை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரவாயலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த திருடனை அயர்லாந்தில் இருந்து கண்டுபிடித்து போலீசிலும் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இதுக்கெல்லாம் சிம்பிள் காரணம் வீட்டு வாசலில் உள்ள கோலம்தான் என்றால் நம்ப முடிகிறதா!

சென்னை மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரவள்ளி... இவர் ஒரு ரிடையர் ஆன ஸ்கூல் டீச்சர்.. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. மகன் அருள்மோகன் அயர்லாந்தில் வேலை பார்த்து வருகிறார்.. மகள் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அதனால் சண்முகசுந்தரவள்ளி தனியாகத்தான் மதுரவாயல் வீட்டில் வசித்து வருகிறார். தன் அம்மாவை எந்நேரம் கவனத்துடன் பார்த்து கொண்டே இருக்க, வீட்டிலேயே ஒரு சிசிடிவி கேமிராவை பிள்ளைகள் பொருத்தி வைத்துள்ளனர்.

 சிசிடிவி கேமிரா

சிசிடிவி கேமிரா

இந்நிலையில், சம்பவத்தன்று தன் மகளை பார்க்க சண்முகசுந்தரவள்ளி அண்ணாநகருக்கு சென்றுவிட்டார்.. அப்போது யதேச்சையாக அயர்லாந்தில் இருந்து அம்மா வீட்டு சிசிடிவியை செல்போனில் பார்த்திருக்கிறார் மகன் அருள்மோகன்.. அப்போது இகே நேரம் விடிகாலை 3.20.

 அருள்மோகன்

அருள்மோகன்

அந்த நேரம் பார்த்து ஒரு திருடன் வீட்டை உடைத்து கொண்டிருந்தார்.. இதை பார்த்து ஷாக் ஆன அருள்மோகன், உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார்.. அப்போது விடிகாலை நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியல் இருந்த போலீசார் அடுத்த 20 வது நிமிஷமே சண்முகசுந்தரவள்ளி வீட்டுக்கு வந்துவிட்டனர்.

முரளி

முரளி

அதற்குள் திருடன் வீட்டுக்குள் சென்று லேப்டாப்பை ஆட்டைய போட ரெடியாக எடுத்து வைத்திருந்தார்.. திடுதிப்பென்று போலீசார் வந்ததும் எதுவும் புரியாமல் விழித்தார்.. அவரை கைது செய்த போலீசார், உடனடியாக விசாரணையும் ஆரம்பித்தனர்.. திருடன் பெயர் முரளி.. செங்கல்பட்டை சேர்ந்தவர்.. 25 வயசாகிறது.. ஆள் பார்க்கவே வித்தியாசமாக இருந்துள்ளார்.. லவ் பெயிலியர் ஆனவராம்.. அதற்கு அடையாளமாக உடம்பெல்லாம் பிளாடால் கீறி கீறி வைத்துள்ளார்.

சைக்கோ

சைக்கோ

இவருக்கு சைக்கோ முரளி என்று இன்னொரு பெயர் இருக்கிறதாம்.. கஞ்சா அடிப்பாராம்.. திருடுவதுதான் பழக்கமாம்.. அதுவும் எல்லா வீட்டிலும் திருட மாட்டாராம், எந்த வீட்டு வாசலில் கோலம் இல்லையோ, அந்த வீட்டுக்குள்தான் நுழைவாராம், காரணம், வீட்டில் யாரும் இல்லாததை அந்த கோலத்தை வைத்துதான் கஞ்சா முரளி கண்டுபிடிப்பாராம்.

சோகம்

சோகம்

இப்படித்தான் பலமுறை பல வீடுகளில் திருடியும் கொண்டும் உள்ளார்.. ஆனால் என்ன ஒரு சோகம் என்றால், ஒவ்வொரு முறை பொருட்களை திருடும்போதும், அதை முரளியால் அனுபவிக்க முடியாதாம்.. அதற்குள் போலீசார் மோப்பம் பிடித்துவந்து முரளியை கைது செய்து கூட்டி கொண்டு போய்விடுவார்களாம்.. இந்த மததிரி 3 முறை நடந்துள்ளது.. இது 4-வது முறை.. இப்போதும் திருடிய எதையுமே அனுபவிக்க முடியவில்லையே என்று முரளி தேம்பி தேம்பி அழுகிறாராம்.. தொடர்ந்து சைக்கோ முரளியிடம் விசாரணை நடந்து வருகிறது.. மதுரவாயலில் நடந்த திருட்டை, அயர்லாந்தில் இருந்து கண்டுபிடித்த இந்த நிகழ்வுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+