மோடிக்கு ரூ.15 லட்சம் மாதிரி.. ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சிகளின் “பிளான்” - தவிடுபொடியாக்கிய பிடிஆர்
குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படும்
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலின்போது குடும்பத் தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்காததை வைத்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்ட எதிர்கட்சிகளுக்கு பெரிய டுவிஸ்டை கொடுத்து உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகள் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், கடந்த 2019 தேர்தல் வரை அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. ரூ.15 லட்சம் எப்போது கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

மோடி மீது விமர்சனம்
குறிப்பாக 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பல இடங்களில் இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றவில்லை என குற்றம்சாட்டினர். ஆனால், பாஜகவினரோ பிரதமர் மோடி அப்படி ஒரு வாக்குறுதியே கொடுக்கவில்லை என விளக்கம் கொடுத்தனர்.

பாஜக விளக்கம்
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தும் அளவுக்கு பணம் இருக்கும் என்று உதாரணத்துக்காகவே மோடி அவ்வாறு சொன்னார் என பாஜகவினர் விளக்கினர். ஆனால், இன்று வரை பொதுமக்கள் மத்தியில் இந்த குற்றச்சாட்டு தொடரவே செய்கிறது.

ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச்
2019 தேர்தலில் மோடி வெற்றிபெற்று அடுத்த 4 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் ஆங்காங்கே 15 லட்சம் எங்கே என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதேபோல்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை எங்கே என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களிலும் இதனை தொடர்ந்து எழுப்பி வந்தனர். தொலைக்காட்சி விவாதங்களிலும், அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திலும் கூட இதே குற்றச்சாட்டை எழுப்பினர்.

ஈரோட்டில் பதில் சொன்ன காங்கிரஸ்
ஆனால், அதே ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன் சென்ற ஸ்டாலின் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் உற்சாகமடைந்தனர். ஈரோடு கிழக்கு தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.

பட்ஜெட்டில் அறிவிப்பு
இந்த நிலையில்தான் ஈரோட்டில் வாக்குறுதி கொடுத்த ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தவிடுபொடியாக்கிய பிடிஆர்
இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் நிதிநிலை நெருக்கடியில் இருப்பதால் பெண்களுக்கான உரிமைத் தொகையை இந்த முறையும் அரசு அறிவிக்காது என்று நினைத்துஹ் 2024 தேர்தலில் இதை வைத்து ஸ்டாலினை விமர்சிக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளார் பிடிஆர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications