“ஆடு” பெயரை ஏன் சொல்றதில்ல? செருப்பு வீச தூண்டுபவர்.. பிடிஆர் அடுக்கிய “4 பாயிண்ட்” - யார சொல்றாரு?
சென்னை: செருப்பு வீச தூண்டுபவர் என்பவர் அண்ணாமலையின் பெயரை கூட சொல்வதில்லை என ஆடு எமோஜியை குறிப்பிட்டு 4 பாயிண்டுகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
சில வாரங்கள் முன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செல்தினார்.
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

10 பேர் கைது
இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அண்ணாமலை ஆடியோ
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என பாஜக அண்ணாமலை ஒப்புக்கொண்டார். "பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான். அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும்" என கூறினார்.

பிடிஆர் ட்வீட்
இந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் அண்ணாமலை பற்றி ஒருபதிவை வெளியிட்டு உள்ளார். அதில்,
"நான் ஏன் ஆடு (Emoji) பெயரை சொல்ல மாட்டேன்?
1. வீரமரணம் அடைந்தவரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது.
2. தேசியக் கொடி இருந்த காரின் மீது செருப்பு வீச வைப்பது.
3. அப்பட்டமாக பொய் சொல்வது.
4. அரசியல் காரணத்துக்காக மக்கள் உணர்வுகளை தூண்டுவது.
அடு போன்ற அற்பமானவர்களின் மனநிலை குறித்து உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications