நீங்க மாட்டுவீங்கன்னு நினைக்கலை.. இதுக்குதான் காத்திருந்தேன்.. மாஜியிடம் கொதித்த பிடிஆர்.. மோதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிடிஆர் தொடர்ந்து ட்வீட்டரில் பதிலடி கொடுத்து வருவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் கலந்து கொண்டார். இது தொடர்பாக பிடிஆர் அளித்த விளக்கத்தில், கடைசி நேரத்தில் எனக்கு இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் காரணமாக என்னால் செல்ல முடியவில்லை. ஏற்கனவே நிறைய மீட்டிங்கிற்கு வருவதாக ஒப்புதல் அளித்துவிட்டேன். அதனால் இந்த ஜிஎஸ்டி மீட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. கடைசி நேரத்தில் அழைத்தால் எப்படி செல்ல முடியும் என்று பிடிஆர் விளக்கம் அளித்து இருந்தார்.

வதந்தி

வதந்தி

இந்த நிலையில்தான் பிடிஆர் லக்னோ செல்லாதது ஏன் என்று பல வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. அதாவது இவரின் கொழுந்தியாளுக்கு வளைகாப்பு காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை. முதல்வர் ஸ்டாலினிடம் தனி விமானம் கேட்டார். அது கிடைக்கவில்லை என்பதால் டெல்லி செல்லவில்லை. பூப்புனித நீராட்டு விழா ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் டெல்லி செல்லவில்லை என்றெல்லாம் பல வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது.

பதில்

பதில்

இந்த வதந்திகள் அனைத்திற்கும் பிடிஆர் பதில் அளித்து இருந்தார். இது வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா. எனக்கு கொழுந்தியாள் இல்லை. அப்படி இருக்கும் போது இதை எல்லாம் வைத்து சிலர் பொய் செய்தி பரப்புகிறார்கள். அதை சிலர் ஷேர் செய்தும் வருகிறார்கள் என்று பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    PTR சுளீர்! | மாட்டு மூத்திரம் குடித்து மூளை கெட்டு விட்டதா? | Oneindia Tamil
     திடீர் மோதல்

    திடீர் மோதல்

    இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜகவிற்கு பிடிஆர் தரப்பிற்கும்தான் மோதல் இருந்தது. பாஜக அண்ணாமலை உள்ளிட்டோர் பிடிஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கு பிடிஆரும் பதில் அளித்து வந்தார். ஆனால் தற்போது ஜெயக்குமாருக்கும் பிடிஆருக்கு எதிர்பாராத மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமார் பிடிஆரை விமர்சனம் செய்ய அதற்கு தற்போது பிடிஆர் பதில் அளித்து புதிய வாக்குவாதம் இணையத்தில் ஏற்பட்டு இருக்கிறது.

    ஜெயக்குமார்

    இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்த ட்வீட் ஒன்றில், தமிழ்நாடு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு அவர் சொல்லுகிற காரணமும் ஏற்க கூடியதாக இல்லை. நான் மக்கள், மற்றும் வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் இருந்தது கிடையாது. நிதி அமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் துரோகம்.. தம்பி பிடிஆர் கவனத்தில் கொள் என்று கடுமையாக ஜெயக்குமார் விமர்சனம் செய்து இருந்தார்.

    பதிலடி

    இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பிடிஆர் அளித்துள்ள பதிலில், ஒன்றிய நிதியமைச்சர் & கவுன்சலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். ஆனால் முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம், என்று கொதிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    விளக்கம்

    விளக்கம்

    இன்னொரு விளக்கத்தில் நான் ஏன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்துவிட்டேன். அதோடு 14 பக்க அறிக்கையை கவுன்சிலுக்கு அனுப்பிவிட்டேன். நிதி அமைச்சகமும் இதை ஏற்றுக்கொண்டு விட்டது. என் சார்பாக கலந்து கொண்ட நிதி துறை செயலாளர் நான் அளித்த கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்துவிட்டார். அப்படி இருக்கும் போது இதை வைத்து வதந்திகளை பரப்புகிறார்கள் என்று பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+