பிடிஆர் கேக் எடுத்த அடுத்த நொடி.. அன்பில் சொன்ன வார்த்தை.. சட்டென பார்த்த உதயநிதி.. என்ன நடந்தது?
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது.
சென்னை: மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
தமிழ்நாடு அரசியலில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமானவர். தற்போது தமிழ்நாடு அரசுக்கான பட்ஜெட்டை இவர் தயார் செய்து வருகிறார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

பட்ஜெட்
இந்த நிலையில் இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிவிப்பு
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் ஆளும் திமுக சார்பாக திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்பாக இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

பிறந்தநாள்
இந்த நிலையில்தான் பட்ஜெட் பணிகளுக்கு இடையில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடினார். தனது 57வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். அப்போது மாஸ்க் அணிந்தபடி பிடிஆர் கேக் வெட்டினார். அப்போது ஹாப்பி பர்த் டே பாட்டு பாடிய அன்பில் மகேஷ்.. ஹாப்பி பர்த் டே ஆங்கிரி பேர்ட் என்று கூறினார். அமைச்சர் பிடிஆர் வேகமாக கோபம் அடைய கூடிய நபர். சட்டென அவருக்கு பல விஷயங்களில் கோபம் வரும். அதை பொதுவில் இவர் காட்டும் வழக்கம் கொண்டவர்.

ஹாப்பி பர்த் டே
இதனால் திமுக நிர்வாகிகள் அவரை செல்லமாக ஆங்கிரி பேர்ட் என்று அழைப்பது உண்டு. இன்றும் அதேபோல்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆங்கிரி பேர்ட் என்று அழைத்தார். இதை கேட்டதும் சட்டென ஒரு நிமிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசித்து திரும்பி பார்த்தார். அங்கே இருந்த அமைச்சர்கள் மூர்த்தி உள்ளிட்டோர் இதை கேட்டு வெடித்து சிரித்தனர். அமைச்சர் பிடிஆரும் சிரித்தபடி இவர்களுக்கு கேக் ஊட்டிவிட்டார்.












Click it and Unblock the Notifications